தமிழ்நாடு :



  • உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு

  • பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

  • பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரர்களை பிடிக்கவிடாமல் பல காளைகள் அசத்தல்

  • பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு

  • பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறாதவர்கள் நாளை மறுநாள் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு

  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்


இந்தியா :



  • ஆண்டுதோறும் ஜனவரி 16-ந் தேதி தொடக்கநிலை தொழில் நிறுவனநாளாக அறிவிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

  • தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பாக மாறும் – பிரதமர் மோடி க்ஷ

  • நாட்டின் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது தொடக்கநிலை தொழில்நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் – பிரதமர் மோடி நம்பிக்கை

  • புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுக்கு பெருமை – பிரதமர் மோடி

  • சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வரும் 22-ந் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவு

  • ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவத்தின் பன்முகத்திறன் வீடியோ வெளியீடு

  • தேசிய ராணுவ தினம் : டெல்லியில் முப்படை தளபதிகளும் ஒரே நேரத்தில் கொடிவீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

  • பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தான் : ராணுவ தளபதி நரவனே பேச்சு


உலகம் :



  • லண்டனில் வாடகைக்கு இருந்த கட்டிடத்தையே ரூபாய் 7 ஆயிரத்து 500 கோடிககு சொந்தமாக வாங்கிய கூகுள்

  • சீனாவில் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களை கத்தியால் குத்திய சக மாணவன்

  • அமெரிக்காவில் அதிகரிக்கும் ரயில் கொள்ளைகள் – பயணிகள் அச்சம்

  • சிகாகோவில் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

  • பிரேசில் நாட்டில் பெருத்த சத்தத்துடன் ஏற்பட்ட பூகம்பம் – மக்கள் பீதி


விளையாட்டு :



  • கேப்டவுடன் டெஸ்ட் தோல்விக்கு இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம்

  • புஜாரா, ரஹானே பேட்டிங் குறித்து பேச விரும்பவில்லை – விராட்கோலி

  • ஜோகோவிச் விசா விவகாரம் குறித்து ரபெல் நடால் கருத்து

  • விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகல்



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண