Breaking LIVE: மேலூர் சிறுமியின் தாயாருக்கு சமையலர் பணி

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 09 Mar 2022 06:13 PM
மேலூர் சிறுமியின் தாயாருக்கு சமையலர் பணி

மதுரை மேலூர் அருகேயுள்ள பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 8பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் தாயாருக்கு சத்துணவுத்துறை சார்பில் அரசு பள்ளியில் சமையலர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது

ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பேரறிவாளன் மாதந்தோறும் கையெழுத்திட வேண்டும் - வழக்கறிஞர் பிரபு

ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் பேரறிவாளன் மாதந்தோறும் முதல் வாரத்தில் கையெழுத்திட வேண்டும் - வழக்கறிஞர் பிரபு

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட், தபெதிக வரவேற்பு

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட், தபெதிக வரவேற்பு

பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு..

சென்செக்ஸ் 1,000, நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டுடெண் சென்செக்ஸ் 1,063 புள்ளிகள் உயர்ந்து 54, 487 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கு : தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவதூறு பரப்பியதாக தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மீது 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சிம்பு தொடர்ந்த வழக்கில், 1000 நாட்கள் கடந்தும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அபாராதத் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த 5 மீனவர்கள் கைது

தூத்துக்குடி அருகே இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். 

மின்நுகர்வோர் மனுக்களுக்கு தீர்வு : அதிகாரிகள் நியமனம்

மின்சாரம் சார்ந்த மனுக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அதிகாரிகளை நியமனம் செய்தது மின்வாரியம். 

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இனிவரும் தேர்தல்களிலும் திமுக வெற்றிபெறும் : முதலமைச்சர் முக ஸ்டாலின்

சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுகதான் வெற்றிபெறும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எல்ஐசி பொதுப்பங்குகளை வெளியிட செபி அனுமதி

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப்பங்குகளை வெளியிட்டு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி திரட்ட செபி அனுமதியளித்துள்ளது. 

மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது : ஓபிஎஸ் கருத்து

மதுவிலக்கு கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவில் 8 கன்னியாகுமரி மீனவர்கள் கைது

 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் அந்தமானிலிருந்து விசைப்படகு மூலம் மீன் பிடிக்க சென்றபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி - 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி 

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

திருச்செந்தூர் கோயிலில் இன்று முதல் கட்டண தரிசனம் ரத்து

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் ரூ. 200, ரூ. 20 கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவில் மெக்னால்டு, கோகோ கோலா சேவை நிறுத்தம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதால் மெக்னால்டு, கோகோ கோலா, பெப்சி, ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தினர். 

Background

10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 16 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையத்தில் பதியலாம். தனித்தேர்வர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


அதேபோல், விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்ற மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. தட்கல் முறையில் 10 ம் வகுப்புக்கு ரூ. 500, 11 மற்றும் 12 ம் வகுப்புக்கு தேர்வு கட்டணத்துடன் ரூ. 1000 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.