தமிழ்நாடு :
- 2022- 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் : புதிய அறிவுப்புகள் வெளியாகிறது.
- உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை : தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
- ஐஐடி, எய்ம்ஸ் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் முழு செலவை அரசே ஏற்கும் : தமிழ்நாடு அரசு
- 2022- 2023ம் ஆண்டில் மாநிலத்தின் வருவாய் ரூ. 2.31 லட்சம் கோடி : நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
- சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்தது.
- பட்டாசு ஆளை வெடிவிபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது : மதுரைகிளை உத்தரவு
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இந்தியா :
- பஞ்சாப் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை
- வெளிநாடுகளின் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
- சோனியா காந்தி பதவி விலக கோரவில்லை : ஜி - 23 குழுவின் தலைவர் குலாம் நபி அறிவிப்பு
- மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் - பசுவராஜ் பொம்மை
உலகம் :
- உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜின் பிங்கும் முதன்முறையாக காணொளி மூலம் பேச்சுவார்த்தை
- கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல்களில் இருந்து கீவ், லிவிங் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
- உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலால் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உக்ரைன் அதிபர் நலம் விசாரித்தார்.
விளையாட்டு :
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீராங்கனை ஒருவர் களத்தில் மயங்கி விழுந்த வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்