தமிழ்நாடு:



  • அனைத்து சமூகத்தினரையும் பொருளாதார ரீதியில் உயர்த்த முயற்சி எடுக்கப்படுகிறது - தோள்சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

  • தமிழர்கள் வன்முறையாளர்கள், சோம்பேறிகள் என அடையாளப்படுத்துவது வருத்தமளிப்பதாக சீமான் பேச்சு - வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்கவில்லை எனவும் விளக்கம் 

  • சென்னையில் இயக்கப்படவுள்ள தனியார் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் - அமைச்சர் சிவசங்கர் உறுதி 

  • தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் மாசிமகத்தையொட்டி கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 

  • தமிழ்நாடு பாஜகவில் இருந்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா - அண்ணாமலை பற்றி கடும் விமர்சனம் 

  • என்.எல்.சி. விரிவாக்கத்திற்கு மேலும் நிலம் கையகப்படுத்துதல் கிடையாது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்     உறுதி  - ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு 

  • உதகை அருகே இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதில் போட்டி - மாணவிகள் மயக்கம் 

  • தனியார் நிகழ்ச்சியில் வைகோ பெயரை குறிப்பிட்டபோது திருமாளவன் கடந்து சென்றது வருத்தமளிக்கிறது - மதிமுக சார்பில் வெளியான அறிக்கையால் பரபரப்பு 

  • 8 வயது முதல் 15 வயது வரை தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை குஷ்பூ குற்றச்சாட்டு - மன உறுதி, நம்பிக்கையால் மீண்டு வந்ததாக பேச்சு 

  • வடமாநில தொழிலாளர்கள் நிலையில் கோவையில்  பீகார் குழுவும், திருப்பூரில் ஜார்க்கண்ட் குழுவும் நேரில் ஆய்வு - போலி வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக கருத்து 


இந்தியா: 



  • வெயில் காலத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு - மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் 

  • சமுதாய ஏற்ற,தாழ்வுகளை களைவதில் தமிழ்நாடு, கேரளா சிறந்து விளங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம் 

  • வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய புகாரில் பீகாரில் ஒருவர் கைது - குற்றவாளிகளை பிடிக்க சமூக வலைத்தளங்களின் உதவியை கோரிய பீகார் போலீஸ் 

  • வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு - உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு 

  • ராணுவத்தினர் குடும்பத்தினர் சீன மொபைல்போன்களை பயன்படுத்துவதை தடுக்க உளவுத்துறை உத்தரவு - ராணுவத்தினர் பேச்சுக்கள் சீனாவால் ஒட்டுக் கேட்கப்படுவதை தடுக்க நடவடிக்கை 

  • திரிபுரா மாநில முதலமைச்சராக மாணிக் சாகா நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு 

  • எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் பெரும் விபத்தில் இருந்து தப்பியது - பிளாஸ்டிக் குப்பைகள் பறந்ததால் தரையிறங்குவதில் நேர்ந்த சிக்கல் 


உலகம்:



  • அமெரிக்காவுடன் நட்பாக இருக்கக்கூடாது என அச்சுறுத்தும் விதமாக எல்லையில் சீனா படைகளை நிறுத்தி வைத்துள்ளது - பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேச்சு 

  • இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு - 50 பேரை காணவில்லை என தகவல் 

  • பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் - 9 போலீசார் பலி 


விளையாட்டு:



  • மகளிர் பிரிமீயர் லீக் தொடர் - 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை அணி 

  • இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் விலகல் 

  • இந்திய பெண்கள் டென்னிஸ் அணியின்  புதிய கேப்டனாக ஷாலினி தாக்குர் சாவ்லா நியமனம்