தமிழ்நாடு:
- 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 75% வாக்குகள் பதிவானது ; நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
- தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
- மருத்துவர்களில் பரிந்துரை இல்லாமல் மருந்து தரக்கூடாது - தமிழ்நாடு அரசு உத்தரவு
- தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழ செய்வதே என் இலக்கு; எனது பிறந்தநாளில் பேனர், ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும் - தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள்
- டெல்லியில் முதல்முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- இந்தியாவிலேயே உயர்கல்வித்துறையில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்க திராவிட மாடல்தான் காரணம் - அமைச்சர் பொன்முடி பேச்சு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
- மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏற்பட வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறே காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா:
- மதுரை எய்ம்ஸ்க்கு 8 ஆண்டில் ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு ஆபாச படங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கர்நாடக மாநிலத்திலே 2வது மிகப்பெரிய ரன்வே கொண்ட ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
- பாஜகவினர் அனைவரும் என்ன ஹரிசந்திராவின் உறவினர்களா? - மணீஷ் சிசோடியா கைது விவகாரத்தில் தெலங்கானா அமைச்சர் கேடிஆர் தடாலடி..!
உலகம்:
- அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இத்தாலி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் மாயமாகி உள்ளனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு
- அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார்: பாகிஸ்தான் ராணுவம்
- ட்விட்டர் நிறுவனத்தில் மேலும் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
விளையாட்டு:
- பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் லவ்லினா, நிகாத் ஜரீன் இடம் பிடித்துள்ளனர்.
- முழு உடல்தகுதியை எட்டாவிட்டாலும் 3-வது டெஸ்டில் விளையாட தயார் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேட்டி அளித்துள்ளார்.
- குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
- புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.