தமிழ்நாடு:



  • 7 திட்டங்களில் 77.5 லட்சம் கோடி முறைகேடு; ஊழல் பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

  • வட தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

  • மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு - முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

  • சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வருகின்ற, ஓணம் பண்டிகை அன்று செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 3.85 கோடி ரூபாய் முதலீடு செய்த ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

  • மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் பிடித்து தீவிர விசாரணை

  •  திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 4-ஆம் தேதி முதல் 38 இடங்களில் திறக்கப்படுகிறது.

  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 8,000 கன அடியாக குறைந்துள்ளது.

  • 'தேசிய கல்விக்கொள்கையை பிட் அடிக்கிறது தமிழக அரசு' - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு


இந்தியா: 



  • தீவிரமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் சந்திராயன் - 3 நிலவின் தரைப்பரப்பில் உள்ள வெப்பநிலை மாற்றங்கள் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தகவல்

  • எந்த சூழலிலும் வெற்றிபெற தெரிந்த புதிய இந்தியாவின் அடையாளம்: சந்திரயான் - 3 சாதனை குறித்து மோடி பெருமிதம்

  • ஆந்திராவில் தேன் எடுக்க சென்ற இடத்தில் கிடைத்த தங்க புதையல் - சென்னையில் விற்று ஆடம்பரமாக வாழ்ந்த 3 பேர் கைது

  •  IIT, IIM, AIIMS, ISRO, DRDO, HAL, BEL, ONGC, SAIL உள்ளிட்ட அத்தனை அரசு நிறுவனங்களும் இந்தியாவுக்கு நேரு மற்றும் காங்கிரஸ் வழங்கிய பரிசுகள்தான் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்

  • டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை அதன் ஆதரவாளர்கள் சிலர் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ராஜஸ்தானில் சாதியை சொல்லி ஆசிரியர்கள் திட்டியதால் 15 வயது தலித் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகம்:



  • ஆஸ்திரேலியாவில் அமெரிக்கா விமானம் நொறுங்கியதில் 3 வீரர்கள் உயிரிழப்பு.

  • மீண்டும் ஜிம்பாப்வே அதிபராக தேர்வு ஆனார் எம்மர்சன்.

  • புகுஷிமா அணு உலை அருகே கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

  • அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல் - மூன்று கருப்பினத்தவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்.

  • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி 5-வது இடத்தைப் பிடித்தது.

  • உலக பேட்மிண்டன் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் குன்லாவுத் தங்கம் வென்று சாதனை.

  • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை

  • உலக பேட்மிண்டன் போட்டி: தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங் சாம்பியன்