தமிழ்நாடு: 



  • நில அளவர் தேர்வில்  ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சிப் பெற்ற விவகாரம் - விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் 

  • ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் - தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து இன்று உள்ளிருப்பு போராட்டம் செய்ய முடிவு 

  • 2023-24 ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் - பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு 

  • புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில் மாணவர்களுக்கு நடந்த ஓவியப்போட்டி - 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு 

  • குன்னூரில் முகாமிட்டுள்ள 3 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம் 

  • புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் வெட்டிக்கொலை 

  • புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக அறிவிக்கப்பட்ட  11 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு 

  • ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு சாதகமாக ஆளுநர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு 


இந்தியா:



  • ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் - கர்நாடகா மற்றும் கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம்

  • காங்கிரஸ் நடத்தும் போராட்டம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பாஜக விமர்சனம் - நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்றவர் என்ற காரணத்தால் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம்  

  • ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் - இருபுறமும் சுவர் அமைத்து பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிடுமாறு வேண்டுகோள் 

  • ஜி20 மாநாட்டுக்கு முந்தைய கருத்தரங்கு நாளை தொடக்கம் - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விசாகப்பட்டினம் 

  • கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களை நுழைய அனுமதித்த விவகாரம் - கனடா தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

  • இந்தியாவில் ஒரே நாளில் 1890 பேருக்கு கொரோனா - சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது

  • சபரிமலையில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது பங்குனி உத்தர திருவிழா - குவியும் பக்தர்கள் 

  • ரமலான், ராமநவமி பண்டிகைகள் நெருங்குவதால் மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - பிரதமர் மோடி அறிவுறுத்தல் 


உலகம்:



  • துனிசியாவில் படகு கவிழ்ந்து விபத்தில் 28 அகதிகள் பலி

  • சிரியாவில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் 19 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் பலி

  • ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவ ரஷ்யா முடிவு


 விளையாட்டு:



  • மகளிர் பிரிமீயர் லீக் தொடர் - டெல்லி அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

  • உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் - இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார்

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் - 259 ரன் இலக்கை எட்டிப்பிடித்து தென்னாப்பிரிக்க அணி சாதனை வெற்றி