தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- 70வது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்: அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு
- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம்
- ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்;அதிமுக சார்பில் 6 நாள் பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- கோடியக்கரை அருகே நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீது மீண்டும் இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல் : இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்
- புறநகர் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் தாம்பரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் - மத்திய இணையமைச்சர் முருகன் தொடங்கி வைத்தார்.
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 282வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.
- சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீயின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- அருணாச்சலில் இருந்து குஜராத் வரை ராகுலின் 2ம் கட்ட யாத்திரை திட்டம் - காங்கிரஸ் மாநாட்டில் அதிரடி அறிவிப்பு
- கேரள அரசியலில் அடுத்த பரபரப்பு : சொப்னாவுடன் முதலமைச்சரின் கூடுதல் தனி செயலாளர் வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங்
- மதுபான கொள்ளை முறைகேடு வழக்கு ; டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது : 8 மணி நேர விசாரணைக்குபின் சிபிஐ அதிரடி
- டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது கீழ்த்தரமான அரசியல் என்றும் மக்கள் பதிலளிப்பார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ல் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
- எனக்கு 52வயதாகிறது. இன்று வரை சொந்தமாக வீடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
- ஷிவமோகா விமான நிலையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் செல்கிறார்.
உலகம்:
- பாகிஸ்தானில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பெருளை பயன்படுத்தும் நபர்களுக்கு தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் மாறுவதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இத்தாலி கடற்பகுதியில் படகு மூழ்கிய விபத்தில் சிக்கி 59 அகதிகள் பலியாகினர்.
- பெரு நாட்டில் இன்கா பேரரசுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு - 800 ஆண்டுகள் பழமையானது என தகவல்
- உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயார் - டென்மார்க் அறிவிப்பு
விளையாட்டு:
- மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.
- உள்நாட்டில் விளையாடும் போது இந்திய அணிக்கு துணை கேப்டனே தேவையில்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
- உலக டேபிள் டென்னிஸ் ‘ஸ்டார் கன்டென்டர்’ சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் இன்று தொடங்கி 5-ந்தேதி வரை நடக்கிறது.
- ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்