தமிழ்நாடு:
- அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை ஒரு வாரத்தில் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
- ஈரோட்டில் சீமான் பரப்புரை மேற்கொண்ட போது நாம் தமிழர் கட்சியினர், திமுகவினர் இடையே மோதல் - பதற்றத்தை தணிக்க காவல்துறை, துணை ராணுவம் குவிப்பு
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை - முறைகேடு புகார்கள் வெளியாகும் நிலையில் நடவடிக்கை
- செல்போன் மூலம் உரையை பதிவு செய்து எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் - மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அதிமுக ஐ.டி. பிரிவு முறையீடு
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமானின் சர்ச்சைப் பேச்சு குறித்து விளக்கம் தர தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையம் உத்தரவு - கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
- ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார் என அமைச்சர் பொன்முடி கேள்வி - சமூகவலைத்தளத்தில் அரசியல் கட்சியினர் போல பதிவிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அறிக்கை
- விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்ட விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
- படையலிட்டு வழிபட வனவிலங்குகளை வேட்டையாடியதாக புகார் - விருதுநகர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் கைது
- தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ - அரியவகை மரங்கள், செடிகள் எரிந்து சேதம்
- சிவகாசியில் குழந்தை விற்பனை - ஆரம்ப சுகாதார ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது
- நீர்நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டின் கோயில்களில் அரசால் நடத்தப்படும் இலவச திருமணம் - செலவு வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவு
- தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி - மார்ச் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- கோவை புறநகர் பகுதியில் உலவும் மக்னா யானையால் மக்கள் அச்சம் - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை உத்தரவு
இந்தியா:
- கிழக்கு லடாக் விவகாரம் குறித்து இந்தியா சீனா இடையே பேச்சுவார்த்தை - படைகளை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்
- டெல்லி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி
- சிவசேனா கட்சி சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு -விளக்கம் அளிக்க ஏக்நாத் ஷிண்டே, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
- திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிக்கான இலவச டிக்கெட் இன்று வெளியீடு
உலகம்:
- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பத்தினரும் இலங்கை போரில் வீரமரணம் அடைந்து விட்டனர் - பழ.நெடுமாறன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் பேட்டி
- கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் - 700 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் சீனா
- அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியில் டிரம்பிற்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விருப்பமனு
விளையாட்டு:
- மகளிர் டி20 உலக்கோப்பை தொடர் : அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
- லடாக்கில் பனியால் உறைந்த ஏரியின் மீது முதல்முறையாக நடைபெற்ற மாரத்தான் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்
- துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் - இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில் தங்கம் வென்றார்