தமிழ்நாடு:
- பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அவர் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவிப்பு
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்கும் என வானிலை மையம் அறிவிப்பு
- ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை 4, 000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - சென்னையில் இருந்து மட்டும் 2, 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் அக்.25ம் தேதி நடக்கிறது : தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அறிவிப்பு
- சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
- அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிக்கு வராத ஆசிரியர் பணிநீக்கம் - தி.மலை ஆட்சியர் அதிரடி
- சென்னை புழல் சிறையில் ஊழல் இருப்பதாகவும், லஞ்சம் தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
- தேவர் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க முடியாது. வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்த அரசின் உத்தரவை நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
- பங்காரு அடிகளார் மறைவு - ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தியா:
- நாட்டின் செல்வத்தை அதானியிடம் ஒப்படைத்த மத்திய அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அரசியல் எஜமானராக இருப்பதற்கும் தொண்டனாக இருப்பதற்கும் மிகப்பெரிய அரசியல் வேறுபாடு உள்ளது. அமேதி தோல்விக்கு ராகுல் காந்தியின் ஆணவமே காரணம் - ஸ்மிருதி இரானி
- பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- நக்சல்களுக்கு காங்கிரஸ் ஊக்கம் அளித்து வருவதாகவும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நக்சல்களிடம் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- நாட்டில் முதல் ரேபிட் ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்க உள்ளார்.
உலகம்:
- போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது.
- செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.
- இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம் என இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் ரிஷி சுனக் பேட்டி
- காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இன்று களமிறங்குகிறது.
- உலகக் கோப்பை 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை பூர்த்தி செய்தார் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி
- 10வது புரோ லீக் கபடி போட்டி வருகின்ற டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.