தமிழ்நாடு:
- ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர், விராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின் - விளையாட்டுத்துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருவதாகவும் புகழாரம்
- 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக குமரகுருபரன் நியமனம்
- தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு சதி செய்கிறது - ஏபிபியின் தெற்கின் எழுச்சி என்ற கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி பேச்சு
- இந்திய மக்கள் கூட்டணி ஆட்சியை காட்டிலும் தனிப்பெரும்பான்மை ஆட்சியையே விரும்புகின்றனர் - தனிநபர் வருமானத்தில் நாடு பின்தங்க காங்கிரஸ் தான் காரணம் எனவும் ஏபிபியின் தெற்கின் எழுச்சி என்ற கருத்தரங்கில் அண்ணாமலை குற்றச்சாட்டு
- டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் - விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு
- சென்னையில் இன்று நடைபெற இருந்த தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் போராட்டம் ரத்து - பள்ளிக்கல்வி அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவு
- சென்னையில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு - போட்டிக்கான டிக்கெட்டுகளை காண்பித்து இரவில் இலவசமாக பயணம் செய்யலாம்
- மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
இந்தியா:
- டெல்லியில் இன்று ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போருக்கு மத்தியில், ஆபரேஷன் அஜய் திட்டதின் மூலம் 221 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்
- கேரள மாநிலம் விழிஞம் துறைமுகத்தில் சீன சரக்கு கப்பல் முதலாவது கப்பலாக நங்கூரமிட்டது
- பீகார் ரயில் விபத்திற்கு தண்டாவளத்தில் இருந்த குறைபாடு தான் காரணம் என முதற்கட்ட விசாரணயில் தகவல்
உலகம்:
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பலி எண்ணிக்கை 4000 கடந்தது - சிரியா மீதும் இஸ்ரேல் குண்டு வீசியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
- ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சபதம்
- பாகிஸ்தானில் கார் - வேன் நேருக்கு நேர் மோதி நேர்ந்த விபத்தில் 12 பேர் பலி
விளையாட்டு:
- உலகக்கோப்பையில் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன - சென்னையில் நடைபெறும் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது
- உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய படுதோல்வி - தொடர் தோல்வியால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிவு
- ரஷ்ய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு