தமிழ்நாடு:



  • ஊட்டி குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் காயம்

  • குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

  • குன்னூர் விபத்து - ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் இரங்கல்

  • சமூக வலைதளத்தில் அதிமுகவும் பாஜகவும் பொய்களைப் பரப்புவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு; பாஜக அரசின் தவறுகளை பொதுமக்களுக்கு திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டும் எனவும் பேச்சு

  • சமூகநீதி குறித்த விளம்பரங்களுக்கு மாறானவையாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கதைகள் இருக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி 

  • நான்காவது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம் - இன்றாவது முடிவு எட்டுமா? 

  • தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது

  • பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி விரைகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

  • வார விடுமுறையில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அலையாய் குவிந்த மக்களால் ஸ்தம்பித்த மலைகளின் இளவரசி 

  • சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் தயாரித்த வடமாநில கைதிகள்; உறவினர்கள் கொடுத்த பழம் சர்க்கரையை பயன்படுத்தி கைவரிசை

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் சத்துணவு முட்டை வைத்திருந்த உணவகத்திற்கு சீல் 

  • திரையரங்கில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் - திரைப்பட தயாரிப்பு சங்கம் கோரிக்கை


இந்தியா



  • காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு படி 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடியாது - கர்நாடக பிடிவாதம் 

  • தெலுங்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி 

  • மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக திட்டமிட்டுள்ளது - முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு 

  • வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு; இன்று முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

  • திருப்பதியில் அலைமோதும் கூட்டும் - இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து என தேவஸ்தானம் அறிவிப்பு 


உலகம்



  • ஸ்காட்லாந்தில் குருத்வாராவிற்குச் செல்ல விடாமல் தடுத்து நிருத்தப்பட்ட இந்திய தூதர்; காலிஸ்தான் திவிரவாதிகளால் பரபரப்பு


விளையாட்டு 



  • ஆசிய விளையாட்டு போட்டிகளில் பாகிஸ்தான் ஹாக்கி அணியை 10-2 என்ற கோல் கண்க்கில் வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி; 8 கோல்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி 

  •  ஆசிய விளையாட்டுப் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லீனா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார்

  • ஆசிய ஆண்கள் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என செட் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தல் 

  • நெருங்கி வரும் உலகக்கோப்பைத் தொடர் மழையால் கைவிடப்படும் பயிற்சி ஆட்டங்கள்; இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மழையால் ரத்து