தமிழ்நாடு:



  • வடகிழக்கு பருவமழை  முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று ஆலோசனை - 9 முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்

  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள்  உதவி மையத்த நாடலாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்

  • காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு  5,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு - கர்நாடக அரசு உடனடியாக தண்ணீரை திறந்துவிட அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

  • அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிப்பு - தனித்து நின்றால் நோட்டாவிற்கு கீழ் தான் அந்த கட்சி வாக்குகளை பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

  • தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் - வீடுகளில் படையலிட்டு பொதுமக்கள் பிரார்த்தனை

  • வடதமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை -  திருவள்ளூரில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் - வீட்டியிலேயே தூக்கிட்டுக் கொண்ட நிலையில் சடலமாக மீட்பு

  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தடை விதிக்க  கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை


இந்தியா:



  • மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் -  சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே  நிறைவேற்றப்படும் என எதிர்ப்பு

  • 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு இப்போது ஒப்புதல் ஏன்? - தோல்வி பயம் வந்துவிட்டதா எனவும் I.N.D.I.A கூட்டணி கேள்வி

  • இன்று முதல் செயல்பட தொடங்குகிறது புதிய நாடாளுமன்ற கட்டடம் - பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை

  • புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் - 110 நாட்கள் பயணிக்கும் என இஸ்ரோ தகவல்

  • திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம் - பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர் திருவீதி உலா

  • மணிப்பூரில் போலீஸ் சீருடையுடன்  ஆயுதங்களை கொண்டு சென்ற 5 பேர் கைது


உலகம்:



  • அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது நேர்ந்த விபத்து - இரண்டு விமானிகள் பலி

  • சோமாலியாவில்  தீவிரவாதிகள் தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி

  • நிலநடுக்கத்தால் அதிர்ந்த தைவான் -  ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

  • துருக்கியில் டெஸ்லா கார் தொழிற்சாலை: எலான் மஸ்கக் - எர்டோகன் பேச்சுவார்த்தை


விளையாட்டு:



  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் கேப்டனாக நியமனம் - முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் மற்றும் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு

  • ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை - பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடம்

  • உலகக்கோப்பை தொடரில்  இந்தியா ஆபத்தானதாக இருக்கும் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் எச்சரிக்கை