தமிழ்நாடு:
- உளூந்தூர்பேட்டையில் ரூ.2302 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
- கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் தொல்லை விவகாரம்; உயர்நீதிமன்றம் ஏன் விசாரணை குழுவை அமைக்க கூடாது - அறக்கட்டளை விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு
- 13 நகரங்களில் வெயில் சதம்; ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி - மாநிலம் முழுவதும் இன்னும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை
- உயரும் பத்திர பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம் - சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா
- தமிழ்நாட்டில் முதன்முறையாக 'குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். எதிர்காலத்தை வளமாக்குவோம்' எனும் பரப்புரையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்துள்ளது.
- யார் வேண்டுமானாலும் இதயநோய்களை முன்கூட்டியே அறியலாம்; ஐஐடி மெட்ராஸின் பரிசோதனை கருவி அறிமுகம்
- எடப்பாடி பழனிச்சாமி யாருடனும் இணக்கமாக செல்லக்கூடிய பழக்கம் இல்லாதவர் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தின சபாபதி தெரிவித்துள்ளார்.
- திருநெல்வேலியில் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக பல வருடங்களாக ஏரிக்கரையோரம் வசித்த இருளர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கப்பட்டது.
இந்தியா:
- பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பசவண்ணாவின் கொள்கைகளான சகோதரத்துவம், சம வாய்ப்புகள் மற்றும் அனைவரும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்ற கொள்கைகளை தாக்கி வருகின்றன என ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியுள்ளார்.
- பஞ்சாப் ராணுவ வீரர்கள் மரணத்தில் திடீர் திருப்பம்: மாயமான இன்சாஸ் துப்பாக்கியைக் கொண்டு பீரங்கி படை பிரிவை சேர்ந்த தேசாய் மோகன் கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- நடைமுறையில் இருக்கும் திருமண முறையை தன்பாலின திருமணத்திற்கு இணையாக கருதுவது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும் என மத்திய அரசு வாதிட்டுள்ளது.
- ஆந்திராவில் முன்னாள் எம்.பி. கொலை செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டியை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தனர்.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம்:
- 176 பேர் பயணித்த உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவ வீரர்களுக்கு சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.
- பாகிஸ்தானில் ஒரு விலை பெட்ரோல் விலை ரூ. 282க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் காத்மாண்டூ முதலிடம்.
விளையாட்டு:
- 16 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடக்கம் - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
- ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு வரலாறூ: 25வது முறையாக 200 ரன்களை கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல்