தமிழ்நாடு:



  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது - 1.06 கோடி மகளிருக்கு ரூ.1,000 தொகை அனுப்பப்பட்டது. 

  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழாவில் என்னில் பாதி என் மனைவி துர்கா.. தாய் தயாளு, மகள் செந்தாமரை குறித்து நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

  • திருவாரூரில் பயிற்சி மருத்துவர் காய்ச்சலால் உயிரிழப்பு - தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

  • புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு - நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை தீவிரம் 

  •  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு 

  • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

  • நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது? - செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக  மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பரபரப்பு குற்றச்சாட்டு 

  • தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சியினரால் அண்ணா பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம் - காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை 

  • மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை மதிமுக எதிர்க்கும் என மதுரை மாநாட்டில் வைகோ பேச்சு 

  • மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்த வேண்டும் - முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 


இந்தியா:



  • கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்கான 'விஸ்வகர்மா' திட்டம் -  பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

  • மணிப்பூர் கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு - 175 பேர் பலியானதாக மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • விலைவாசி உயர்வால் ஏழைகள் கடும் அவதிப்படுகிறார்கள் - தேர்தலில் பழி தீர்ப்பார்கள் என காங்கிரஸ்  மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

  • கருத்து சுதந்திரம் பற்றி நீதிமன்ற அறையில்  வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

  • தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர கர்நாடகா அரசு மறுப்பு - செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு 

  • கொரோனாவை விட ‘நிபா’ வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல் 

  • காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் நலனை காங்கிரஸ் அரசு தியாகம் செய்கிறது - நளின்குமார் கட்டீல் எம்.பி. குற்றம்சாட்டு


உலகம்:



  • அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி அதிர்ச்சி தகவல்

  • 5வது மக்கள்தொகை உச்சி மாநாட்டில் ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து

  • மசாக்ரே ஆறு பிரச்சினையால் ஹைதி உடனான எல்லைகளை டொமினிக் குடியரசு மூடியது 

  • வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 778 ஆக உயர்வு 


விளையாட்டு: 



  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா - மொராக்கோ அணிகள் இன்று மோதல் 

  • உலகக்கோப்பை இன்றும், நாளையும் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு - ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்படுகிறது

  • நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

  • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி