தமிழ்நாடு: 



  • தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு நேற்று முதல் தொடங்கியது : முதல் நாள் தேர்வில் 50 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை

  • 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

  • பிராமண பாத்திரத்தை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க காவல்துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் இல்லை - ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

  • நிதி நெருக்கடி நிலவும் சூழ்நிலையிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க முதலமைச்சர் ரூ.800 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

  • மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்பு - பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தகவல்

  • குழந்தைகளுக்கு நிரந்தர வைப்பு நிதி; சிலிண்டருக்கு ரூ.200 மானியம் - புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு

  • சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்.


இந்தியா:



  • லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுலுக்கு எதிராக பாஜக கடும் அமளி: நாடாளுமன்றம் முடங்கியது

  • ரூ.130 கோடி டிஜிட்டல் ரூபாய் புழக்கத்தில் உள்ளது - நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தகவல்

  • ”சென்ற 5 ஆண்டுகளில் டெல்லி விமான நிலையம் மூலம் சுமார் ரூ.5,500 கோடியும், மும்பை விமான நிலையம் மூலம் ரூ.5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டது” - விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர்

  • ஜனநாயகத்தை நசுக்கியவர்கள், தற்போது அதை காப்பது போல் பேசுகிறார்கள். பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் நாட்டை ஆள்கிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

  • பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  • சுருக்குமடி வலையால் மீன் பிடிக்க கூடுதல் நேரம் கோரிய இடையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உலகம்:



  • உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்.

  • 3-வது முறையாக சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்ய பயணம் மேற்கொண்டு அதிபர் புதினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

  • கடந்த நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ் தற்போது அடுத்த ரவுண்ட் லே ஆஃப் செய்ய தயாராகிவிட்டது.

  • அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எலிகள் மூலம் புதியவகை கொரோனா திரிபு பரவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


விளையாட்டு: 



  • மகளிர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணி வலுவான டெல்லி அணியிடம் போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபார சதம் அடித்த விராட்கோலி காய்ச்சலுடன் ஆடி சதமடித்தாக தெரியவந்துள்ளது.

  • இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

  • இலங்கை உடனான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து வென்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது.

  • இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின், நான் வேண்டுமானால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா? என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.