தமிழ்நாடு:



  • சித்திரை திருநாள், தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோயில்களில்  குவிந்த மக்கள்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

  • தமிழ் புத்தாண்டை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

  • திமுகவினரின் சொத்துப் பட்டியலை இன்று வெளியிடுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

  • கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வருகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ஜுன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

  • தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது - ஆளுநர் ரவி விளக்கம்

  • தமிழ்நாட்டில் கரூர், வேலூர்  உட்பட  12 இடங்களில் சதம் அடித்தது வெயில் - அதிகபட்சமாக  சேலத்தில் 105 டிகிரியாக பதிவானது வெப்பம்


இந்தியா:



  • டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்  நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழாவில்,  பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

  • உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் - தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

  • அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் இன்று அரசு விடுமுறை

  • நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓரணியில் இணையும்  எதிர்க்கட்சிகள்: கார்கே, ராகுல்  காந்தி உடன்  தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத் பவார் நேரில் ஆலோசனை

  • ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு

  • கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு மீண்டும் 4% இடஒதுக்கீடு


உலகம்:



  • ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் மீண்டும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதித்த வடகொரியா - வலுக்கும் கண்டனங்கள்

  • உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: 15 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நார்வே அரசாங்கம் அதிரடி

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கை தசையை  நாக்கில் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

  • மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது  தொடர்  கார் குண்டு வெடிப்பு - 4 பேர் பலி

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் - லாகூர் கோர்ட்டு உத்தரவு


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை நடப்பு சாம்பியனான குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன 

  • சென்னையில் வரும் 30ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை மீண்டும் இயக்கப்படுகிறது விசில் போடு எக்ஸ்பிரஸ்

  • ஆசிய மல்யுத்த போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்