தமிழ்நாடு: 



  • தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

  • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமல்; குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு சிறை, 20 லட்சம் ரூபாய் அபராதம்

  • பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தேர்வுத்துறை எச்சரிக்கை

  • 173 தொகுதியில் ‘மினி ஸ்டேடியம்’ சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

  • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு : கலாஷேத்ரா உதவி பேராசியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

  • தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்தால் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

  • அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ் உதவியாளர் மற்றும் பலருக்கு 182 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக விற்ற விஏஓ உள்பட 5 பேர் கைது - சிபிசிஐடி நள்ளிரவில் அதிரடி 

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 கட்டமாக கூடுதலாக 19 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள்; இன்று முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் - மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தகவல்

  • ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • தமிழர்களே இல்லாத சி.எஸ்.கே. அணியை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.


இந்தியா:



  • கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டருக்கு பா.ஜ.க. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை நேற்று வெளியிட்டது. 

  • மக்களவை தேர்தலில் 300 இடங்களில் பா.ஜ.க. வெல்லும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • “என் பதவியை பறிக்கலாம்; மக்களுடனான உறவை பிரிக்க முடியாது” - வயநாட்டில் ராகுல்காந்தி அதிரடி

  • 'என் நாக்கில் முத்தமிடு' என தலாய்லாமா கேட்டபோது அந்த சபையில் சிரித்தவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும், அவர்களுக்கு சவுக்கடி தர வேண்டும் என சின்மயி தெரிவித்துள்ளார்.

  • இந்தியாவில் புதிதாக 5,676 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கொல்கத்தாவின் டம்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் தேசிய கீதத்தை அவமரியாதையாகப் பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


உலகம்:



  • உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.50 கோடியாக உயர்ந்துள்ளது.

  • ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார்.

  • பெரு நாட்டில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்ட இந்திய தூதர் தரன்ஜீத் சிங்குக்கு சீக்கிய ஹீரோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


விளையாட்டு:



  • ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி அணியை வீழ்த்தி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதவி செய்தது. 

  • ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது. 

  • ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக மும்பை, டெல்லி உள்ளிட்ட 5 மைதானங்களை புதுப்பிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. 

  • சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு வெற்றியை பரிசளிக்கவுள்ளதாக, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.