தமிழ்நாடு:
- ஜெயலலிதாவை விட என் மனைவி சக்தி வாய்ந்தவர் என அண்ணாமலை அதிரடி; பதிலடி கொடுத்த அதிமுக
- 9ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்; சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
- 4 மாதத்திற்கு பின் மசோதாவை ஆளுநர் திருப்பு அனுப்பிய நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
- பெட்ரோல் விலை உயர்வுதான் இந்தியாவின் வளர்ச்சி, ஆளுநருக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை - உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில்
- வரலாறு காணாத அளவுக்கு 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதியில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- என்எல்சி, அரசின் அடக்குமுறை: கடலூரில் பிப்.11-ல் முழு அடைப்பு போராட்டம்- பாமக அறிவிப்பு
- தமிழ்நாடு முழுவதிலும் விவசாயத்திற்கு ஒரு நாளிற்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் கோடையிலும் தடையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
- 'வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஒரு சிலருக்கு அரசியல் கட்சி தொடர்பு இருக்கிறது’ - டிஜிபி சைலேந்திர பாபு
- ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவித்து வாபஸ் பெற்ற செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
- பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
இந்தியா:
- குஜராத் மாநில பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
- நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுவதாக தெரிவித்த ராகுல்காந்திக்கு குடியரசு துணை தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இந்திய உணவு தானிய சந்தையை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
- கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாதவகையில், மின்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 மிதக்கும் கப்பல்தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
- பஞ்சாப்பில் ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு பொற்கோவிலில் வழிபாடு செய்தார்.
- விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
உலகம்:
- நைஜீரியா லாகோஸ் பகுதியில் அரசு ஊழியர்களை ஏற்றிசென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.
- உக்ரைனின் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, ராணுவ படை உதவியுடன் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
- சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் இருக்கும் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
- நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இங்கிலாந்து வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
- 9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதுகிறது.
- அகமதாபாத் டெஸ்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.