தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இது மேலும் வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. 


சிவகங்கை, மதுரை விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அக்டோபர் 22 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு :


தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிகிறது. 


21.10.2022:


தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தார், திரூப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, சிவகங்கை, நாமக்கல், சேலம் திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.



22.10.2022:


தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நிலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கணமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னை:


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்குக்கான எச்சரிக்கை:


20.10.2022


தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென் வழக்கு வங்கக்கடல் பாறிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


21.10.20122 மற்றும் 22.10.2022:


மன்னார் வளைடோ மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் தெற்கு இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேலே குறிப்பிட்ட நாட்கள் மீனவர்கல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.