Breaking Live :ஜனவரி-2; திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 17 Dec 2022 05:54 PM
நாளை மறுநாள் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்..!

வரும் திங்கட்கிழமை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

ஜனவரி-2; திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜனவரி-2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழர்களின் விசைப்படகை சிறைபிடித்த இலங்கை கடற்படை

தலைமன்னார் அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகை, இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Breaking Live : பழனி கோயிலில் நாளை மறுநாள் ரோப்கார் சேவை ரத்து

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் ரோப்கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Breaking Live : என்எல்சிக்கு எதிராக அன்புமணி நடைபயணம்

என்எல்சி 25,000 ஏக்கர் விளை நிலங்களை பறிப்பதை கைவிட வலியுறுத்தி ஜனவரி மாதம் 7,8 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு எட்டாக் கனி ஆகிறதா ஆவின் பொருள்? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆவின் பொருட்களை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம் - 21ம் தேதி முதல் டோக்கன்

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த முடிமக்களுக்கு வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லை டோக்கன் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

Breaking Live : ”கலாசாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டுப் போட்டி” - தமிழக அரசு

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கலாசாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிக்கப்பட்டது.

Breaking Live : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 88 உயர்ந்து ரூ. 40,448 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு  ரூபாய் 11 உயர்ந்து ரூ.5,056 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை  ரூ.73.00 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனையாகிறது.

Breaking Live : ஆவினில் வெண்ணெய் விலை உயர்வு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. 500 கிராம் சமையல் வெண்ணெய் ரூ.260 ஆகவும், 100 கிராம் சமையல் வெண்ணெய் ரூ.55 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

Breaking Live : திருவண்ணாமலை - மகா தீப கொப்பரை மலையிலிருந்து கீழே இறக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மலை உச்சயில் இருந்து மகா தீப கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியுள்ளது. 2,668 அடி உயர மலையில் இருந்து கொப்பரை இறக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. டிச.6ம் தேதி மகா தீபம் ஏற்றுவதற்காக 5-ஆம் தேதியே கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Breaking Live : 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் அனுமதி

கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் நாள்தோறும் சராசரியாக 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Breaking Live : இலங்கை தமிழர்கள் மேலும் 4 பேர் தமிழகம் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். மணல் திட்டில் உள்ள இலங்கை தமிழர்களை மீட்க இந்திய கடலோர காவல்படை விரைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

உலகக்கோப்பை ஹாக்கித்தொடர் - கோப்பை அறிமுகம்..!

உலகக்கோப்பை ஹாக்கித்தொடருக்கான கோப்பையை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். உலகக்கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் ஒடிசாவில் வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேது வரை நடைபெறுகிறது. 

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு !

ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்  ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 7 முதல் மார்ச் 25 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 8 முதல் மார்ச் 26 வரை ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 20ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இன்றைய விலை


இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 210ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிச.17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இந்நிலையில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.