Breaking LIVE: இந்தியா வந்தடைந்தது 36வது ரஃபேல் விமானம்..!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 15 Dec 2022 06:28 PM
அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!

ம்துராந்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுவதற்காக வைக்கப்பட்ட இருந்த 100 அடி அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு.

Breaking Live : ”ஐஆர்சிடிசி பயனர்களின் தரவுகள் விற்கப்படாது” - ரயில்வே அமைச்சகம் தகவல்

ஐஆர்சிடிசியிடம் உள்ள பயனர்களின் தகவல்கள் யாருக்கும் விற்கப்படாது எனவும் பயனாளர்களின் எந்த ஒரு தனிப்பட்ட தரவும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் விற்கப்படாது என்றும் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Breaking LIVE: இந்தியா வந்தடைந்தது 36வது ரஃபேல் விமானம்..!

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவன ஒப்பந்தத்தின்படி 36வது ரஃபேல் விமானம் இந்தியா வந்தடைந்தது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், இதுவரை வந்த 35 விமானங்கள் மேற்கு வங்கம், ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Breaking LIVE: மின் எண்ணுடன் ஆதார் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய தகவல்

தமிழகத்தில்  மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை 1.03 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மின் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Breaking LIVE: மெரினாவில் மாற்றுத்திறனாளிக்கான பாதை நாளை திறப்பு - சென்னை மாநகராட்சி தகவல்

மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிக்கான பாதையை சீரமைக்கும் பணிகள் தீவிரம் - நாளை திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Breaking LIVE: மதுரை அழகப்பன் நகர் ரயில்வே கேட் டிசம்பர் 18 ஆம் தேதி வரை மூடல்

மதுரை பழங்காநத்தம் - பசுமலை சாலையை இணைக்கும் அழகப்பன் நகர் ரயில்வே கேட் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருவதால் டிசம்பர் 18 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மூடப்படும் என அறிவிப்பு 

Breaking LIVE: போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக அரசின் கடுமையான நடவடிக்கை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணை இல்லாமல் கடத்தல் நடந்திருக்க முடியாது என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: 2 தரைப்பாலங்கள் மூழ்கின

திருப்பத்தூர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் பகுதியில் 2 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. 

தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து 16,000 கன அடியாக குறைவு..!

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவேரி நீர்வரத்து 18,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக குறைந்துள்ளது. 

தேனி அருகே வீட்டின் மொட்டை மாடியில் சிறுத்தை தோலை காயவைத்த துரைப்பாண்டி கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மா பட்டியில்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் மாடியில்  சிறுத்தை தோல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிந்ததை அடுத்து வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்ததில் மொட்டை மாடியில் வெயிலில் சிறுத்தை தோள் காய வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் பெத்து நாயக்கர் மகன் துரைப்பாண்டி என்பவன் மீது வழக்கு பதிவு செய்து வனத்துனை துறையினர் தேடிவந்த நிலையில் தலைமறைவாக இருந்த துரைப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். 

ஃபிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி: 18-ம் தேதி அர்ஜென்டினா - பிரான்ஸ் பலப்பரீட்சை!

2-வது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவாவைத் தோற்கடித்தது பிரான்ஸ். வரும் 18-ம் தேதி இரவு அர்ஜென்டீனாவுடன் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை.

மொரோக்கோ அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி..!

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

புரோ கபடி லீக் அரையிறுதி: தமிழ் தலைவாஸ்- புனே அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக் அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்- புனே அணிகள் இன்று நேருக்குநேர் சந்திக்க இருக்கின்றனர்.

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இன்றைய விலை


இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 208ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிச.15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இந்நிலையில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.