Breaking LIVE: கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டை இணைக்க நாங்கள் (பாஜக) இருக்கிறோம். நாட்டை பிளக்க அவர்கள் (திமுக) இருக்கிறார்கள். எனது கவலை என்னவென்றால் நாடு பாதுகாப்பான கையில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை. ஆகையால், கையை மாற்றுவது நல்லது என, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.
2014 மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து, நாடாளுமன்றத்திற்கு பாஜக எம்.பி.க்களை அனுப்ப முடியவில்லை. ஆனால், இந்த முறை பாஜகவை சேர்ந்த 25-க்கும் அதிகமான எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என, கோவையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.
கடந்த வரலாற்றை படிப்பவர்களால்தான் நிகழ்காலத்தில் வரலாற்றைப் படைக்கமுடியும் - முதலமைச்சர் ஸ்டாலின்
பிரதமாரின் சகோதரர் பிரகலாத் மோடி உட்பட 6 பேர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. மைசூருக்கு சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கி பிரகலாத் மோடி உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்தது.
சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, சென்னை, கோவை மாநகராட்சிகளில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பெங்களூர் - சென்னை செல்லும் பயணிகள் ரயில் தாமதம். சரக்கு ரயிலில் பெட்டிகளை இணைக்கக்கூடிய கப்ளிங் உடைந்ததால் அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடவடிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் குவிந்துவருகின்றனர்.
பாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து வெள்ளை நிற நாகபாம்பு கண்டுபிடிப்பு - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்குகிறது.
கோவை மாநகராட்சி வரிவசூல் மையங்கள் இன்று முதல் 29ம் தேதி வரை செயல்படாது என ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கையாள்வதற்காக அவசரகால தடுப்பு ஒத்திகை இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சொத்து வரி பாக்கி செலுத்தாததால் செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் ஜப்தி செய்து சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் சொத்து வரி 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கடந்த ஆறு ஆண்டுகளாக செலுத்தாததால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Background
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய விலை
இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 220ஆவது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (டிச.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -