Tirumala Tirupati : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியாக உள்ளது.


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இந்த கோயிலில் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஆர்ஜித சேவையின் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்பட உள்ளது. டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை செலுத்தி தங்களது டிக்கெட்டுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஆர்ஜித பிரம்மோற்சவம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளுக்காக முன்பதிவு டிக்கெட் இன்று காலை 10.30 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை அடுத்து, ஜூலை மாதத்தில் நடைபெறம் தங்கப்பிரதட்சனை டோக்கன் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாக உள்ளது.


அதே போன்று, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் தரிசன செய்ய இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டை தேவஸ்தானம் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இணையத்தில் வெளியீடுகிறது. திருமலையில் உள்ள தேவஸ்தானம் அறைகளுக்கான மே மாதம் டிக்கெட் ஒதுக்கீடு ஏப்ரல் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாக உள்ளது என்று தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.


இதற்கிடையில், கடந்த மாதம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதன்படி, மார்ச் 1 முதல் 31ம் தேதி வரையில் மட்டும், 20 லட்சத்து 57 அயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் உண்டியல் காணிக்கையாக 120 கோடியே 29 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. ஒரு கோடியே இரண்டாயிரம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.


இந்நிலையில், தற்போது ஜூலை மாதம் நடைபெற உள்ள ஆர்ஜித சேவையின் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை பயன்படுத்தி சரியான நேரத்தில் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


TN Weather Update: கத்திரி வெயிலே இன்னும் ஆரம்பிக்கல, அதுக்குள்ள இப்படியா? 15 மாவட்டங்களில் சதம் அடித்த வெப்பநிலை.. இன்றைய அப்டேட் இதோ..