திருப்பதியில் தரிசனத்திற்காக வரும் வாகனங்களுக்கு புதிய விதிகளை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவில்:
உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் நடைப்பாதையாகவும், பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும், இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை இருக்கும்.
இதன் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் புதிய விதி ஒன்றை வாகனங்களுக்கு கொண்டுள்ளது.
Fast Tag கட்டாயம்:
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் வாகனங்களில் வரும் போது சுங்கச்சாவடிகளில் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் ஏற்படும் நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்படுகிறது
இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு விரைவாக செல்லவும், நெரிசல் இல்லா பயணம் வழங்க TTD முடிவு செய்துள்ளது. இதற்காக, திருமலைக்கு வரும் வாகனங்களுக்கு FASTag-ஐ கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
-
ஆகஸ்ட் 15 முதல் திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஃபாஸ்ட் டாக் வைத்திருக்க வேண்டும்.
-
ஃபாஸ்ட் டாக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு திருமலைக்குள் அனுமதி வழங்கப்படாது.
-
ஏற்கனவே ஃபாஸ்ட் டாக் இல்லாதவர்கள், திருமலை அடிவாரத்தில் உள்ள வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஃபாஸ்ட் டாக் எடுத்து கொள்ளலாம்.
-
வாகனங்களின் போக்குவரத்து கட்டணங்கள் ஃபாஸ்ட் டாக் மூலம் மட்டுமே வசூலிக்கப்படும்.
-
பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், தேவஸ்தான நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்த நடைமுறை, திருமலைக்கு வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் மற்றும் நேர விரயத்தை தவிர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.