Tirupati Ticket Bookings: மார்ச் மாதம் திருப்பதி போகனுமா? அப்போ இன்றே ஆன்லைன் டிக்கெட் புக் பண்ணுங்க..!

திருமலை திருப்பதி கோயிலில் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான அர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

Continues below advertisement

திருமலை திருப்பதி கோயிலில் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான அர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

Continues below advertisement

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை திருமலை திருப்பதி கோயிலில் அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கும். கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதேசமயம் பாலாலயம் தொடர்பான பணிகள் காரணமாக பிப்ரவரி 22 முதல் 28ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி இருக்காது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

பாலாலயம் என்றால் என்ன?

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாதகாலம் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். அதேசமயம்  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். மூலவருக்கு நடைபெறும் கட்டண சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் 1957- 58 ஆம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Continues below advertisement