வானிலிருந்து  மற்றொரு வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையான அஸ்தரா பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  (Defence Research and Development Organisation (DRDO)) வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்கரை, வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்து Su-30MKI போர் விமானம் மூலம் அஸ்திரா ஏவுகணை ஏவப்பட்டது. இது 100 கிமீ-க்கும் மேல் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாக்கி இந்த ஏவுகணையின் பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்திரா ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.


அஸ்திரா ஏவுகணை  LCA Tejas Mark 1 A போர் விமானத்திலும் ,  MiG-29 ரக போர் விமானத்திலும் பயன்படுத்தபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அஸ்திரா ஏவுகணை


விமானத்தில் இருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய திறன்மிக்க தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.  இது எல்லாவிதமான தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் செலுத்தக் கூடியது என்பது இதன் சிறப்பு. 


பல்வேறு தொலைவுகளில் உள்ள இலக்குகளை அழிக்கும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் சிறப்பம்சம் என்னவெனில், குறைந்த மற்றும் தொலை தூர இலக்கு ஆகிய இரண்டு நிலைகளிலும் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியது. ’solid-fuel rocket motor ’ மூலம் அஸ்திரா வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன திறன்களுடன் செயல்படகூடிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அக்டிவ் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இதிலுள்ள ரேடார், வழிகாட்டி ஆப்சன்கள் உள்ளிட்டவைகள் கடினமான வானிலையிலும் சுற்றுச்சூழல் தட்பவெட்பத்தினை கண்காணித்து, கணக்கிட்டு அதன் இலக்குகளை எட்டுவதற்கு உதவியாக இருக்கும். 


இது பல்வேறு ரக விமானங்களிலும் பயன்படுத்தலாம். Su-30MKI, மைக்ரேஜ் 2000 (Mirage 2000) மற்றும் தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். 


அஸ்திரா ஏவுகணை முதன்முதலின் 2003 ஆம் ஆண்டு சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அது வெற்றியில் முடிந்தது. பின்னர், 2019 ஆம் ஆண்டு இந்திய விமான படையிடம் அஸ்திரா ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஏவுகணையாகும்.


ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஏவுகணை உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைவதற்கான பயணத்துற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் (Hindustan Aeronautics Limited (HAL).) ரூ.2,971 கோடி மதிப்பில் அஸ்திரா ஏவுகணை தயாரிப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.


அஸ்திரா ஏவுகணை 3.8 மீட்டர் நீளமும், 154 கிலோ எடையும் கொண்டது. இந்திய கடறடைக்கு சொந்தமான ஹேரியர் ஜெட் விமானங்களிலும் இதை பயன்படுத்த முடியும். இது இளம் நீல வண்ணத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டு சீறிப் பாயும் தன்மை கொண்டது. 


குறைந்த எடை கொண்ட போர் விமானமான (The Light Combat Aircraft (LCA) ) தேஜஸ் (Tejas) ரக போர் விமானங்கள் இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது
இது இந்திய விமான துறையில் பயன்பாட்டில் இருக்கும் மிக்-21.எஸ் ரக விமானங்களுக்கு மாற்றாக தயாரிக்கப்பட்டது. இதன் நீளம் 13.20 மீ, உயரம் 4.40 மீட்டர். அதிகபட்சமாக 1.8 மாச்  3000 கி.மீ தொலைவிற்கு பறக்க முடியும். சிங்கிள் எஞ்சின் சிஸ்டம் உடன் பல்வேறு வகையில் இதை பயன்படுத்தலாம். மேலும், வான்வளி தாக்குதல், க்ரவுண்ட் அட்டாக் ஆகியற்றிற்கும் இது திறன் பெற்றுள்ளது. இதன் எடை5680 கிலோ. எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்படுமாயின், இதன் எடை 9,500 கிலோவாக அதிகரிக்கும்.


 இந்திய விமான படையில்  உள்ளதேஜஸ் மார்க் 1 ரக போர் விமானங்களில், அதிநவீன ரேடார், போர் காலத்திற்கு தகுதாற்போல் எலக்ரானிக் முறையிலான வசதிகள், வானில் இருந்து தரையை தாக்கும், வான்வழி தாக்குதல் நடத்தும்  ஏவுகணைகள் உள்ளிட்டவைகள் இருக்கும். அதோடு, இதில் விமான பைலட்களுக்கு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல எச்சரிக்கை வழங்குவதற்கும் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதுவரையில் தேஜேஸ் ரக விமானங்களில் புதிய தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ஆயத சிஸ்டம் உள்ளிட்டவைகளுடன் பலமுறை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக  ”Israeli Derby Beyond Visual Range (BVR)’ ரக ஏவுகணையும் உள்ளது. 


மேலும், தேஜஸ் 2.0 திட்டத்தில் தேஜஸ் மார்க் 2 ரக விமானங்கள் தயார் செய்யப்படவுள்ளது.