36 மணிநேர கோவில் திருவிழாவான திருச்சூர் பூரம் கொண்டாட கேரளா தயாராகி வருகிறது. இது கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான மற்றும் வண்ணமயமான திருவிழாவாகவும், அனைத்து பூரங்களின் தாயாகவும் திகழ்கிறது. மேலும் இந்த திருவிழா, கலாச்சார மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடையாளமாக உள்ளது. இதில் யானைகளின் அணிவகுப்பு, மேள இசை மிகவும் முக்கியத்துவம் பெறும். இந்த அற்புதமான விழா கேரளாவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைக்கிறது. மலையாள மாதமான மேடத்தில் (ஏப்ரல்-மே) திருச்சூரில் உள்ள தேக்கிங்காடு மைதானத்தில் இது கொண்டாடப்படுகிறது. திருச்சூர் பூரத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் முதல் திருவிழாவின் போது நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சடங்குகள் வரை, இந்த விழாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
திருச்சூர் பூரம் தேதி மற்றும் நேரம்
திருச்சூர் பூரம் 2023 மே 1 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. பூரம் நட்சத்திரம் ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு தொடங்கி மே 1 ஆம் தேதி மாலை 5:51 மணிக்கு முடிவடையும். மே 1 ஆம் தேதி மாலை 3 மணிக்கு நட்சத்திர நிகழ்ச்சியான 'வெடிக்கெட்டு' எனக்கூறப்படும் வாணவேடிக்கை நடைபெறும். 'பகல் பூரம்' காலை 8 மணிக்குத் தொடங்கும், அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு 'உபச்சாரம் சொல்லல்' நிறைவு விழா நடைபெறும். நள்ளிரவு 12.45 மணிக்கு 'பகல் வெடிக்கட்டு' வாணவேடிக்கை நடக்கிறது.
திருச்சூர் பூரம் வரலாறு
திருச்சூர் பூரம் 200 ஆண்டுகளுக்கு முந்தைய கேரளாவில் உள்ள ஒரு முக்கியமான கோவில் திருவிழா ஆகும். இந்த திருவிழா 1790 முதல் 1805 வரை கொச்சி ராஜ்யத்தின் ஆட்சியாளரான ஷக்தன் தம்புரனால் நிறுவப்பட்டது. திருவிழாவின் பின்னணியில் உள்ள கதை 1796 ஆம் ஆண்டு கனமழை காரணமாக பிரபலமான ஆராட்டுப்புழா பூரத்தில் ஒரு குழுவுக்கு மட்டும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. அவர்களின் புகார்களைக் கேட்ட ஷக்தன் தம்புரான், மே மாதம் அதே நாளில் தனது சொந்த திருவிழாவான திருச்சூர் பூரத்தை தொடங்க முடிவு செய்தார். இந்த திருவிழா கேரளாவில் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வாக மாறியுள்ள நிலையில், இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து காண விரும்புகின்றனர். இன்று, இது உலகின் மிகவும் பிரபலமான கோயில் திருவிழாக்களில் ஒன்றாக திகழ்கிறது.
திருச்சூர் பூரம் கொண்டாட்டம்
ஆசியாவின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இந்த திருச்சூர் பூரம் கருதப்படுகிறது. திருச்சூர் பூரத்திற்கு முன், ஆராட்டுப்புழா பூரம் கேரளாவில் மிகவும் குறிப்பிடத்தக்க கோவில் திருவிழாவாக இருந்தது. திருச்சூர் பூரத்தின் போது, திருச்சூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கோயில்கள் வடக்குநாதன் கோயிலின் முதன்மைக் கடவுளான வடக்குநாதனுக்கு பிரார்த்தனை மற்றும் மரியாதை செய்ய அழைக்கப்படுகின்றன. இந்த திருவிழாவில் 50 க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகளின் பிரமாண்ட ஊர்வலம் மற்றும் செண்ட மேளம், பஞ்ச வாத்தியம் ஆகியவற்றின் பாரம்பரிய இசை பிரபலமாக உள்ளது. இந்த திருவிழா வெடிக்கெட்டு எனப்படும் வானவேடிக்கைக்கு பிரபலமானது. இது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
திருச்சூர் பூரம் கொண்டாட்டங்கள்
திருச்சூர் பூரம் கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே கொடியேற்றம் மற்றும் வாணவேடிக்கையுடன் தொடங்குகிறது. பூரவிளம்பரம் எனக்கூறப்படும், நெய்திலக்காவிலம்மாவின் சிலையை ஏந்திய யானை வடக்குநாதன் கோயிலின் தெற்கு நுழைவு வாயிலைத் திறப்பது மற்றொரு மரபு. திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவஸ்தானத்தின் ஒரு மணி நேர வாணவேடிக்கையான மாதிரி வெடிகெட்டு, கொடியேற்றத்திற்குப் பிறகு நான்கு நாட்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. அதிகாலையில் துவங்கும் பூரம், 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் மேளத்தில் மாடத்தில் வருவது சிறப்பு. ஏழாம் நாள் அதிகாலையில் முக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து திருச்சூர் பூரம் முடிவடையும் வகையில் பகல் வெடிக்கட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.