அல்லு அர்ஜூன், சமந்தா, ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா:தி ரைஸ் சமீப காலங்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்று. மறக்கமுடியாத வசனங்களுடன் பார்வையாளர்களிடையே ஆழமான முத்திரையை பதித்தது. கதாநாயகன், புஷ்பா, ஒரு மோசமான பின்னணியில் இருந்து எழுந்து, மரத்தை கடத்துவதன் மூலம் செல்வத்தை குவிக்கிறார். அவர் படத்தில் மற்றவர்களை வழிநடத்துகிறார், மேலும் செயல்பாட்டில் காவல்துறையினரையும் மிஞ்சுகிறார்.
ஆனால், நிஜ வாழ்க்கை "புஷ்பா" அதைச் செய்யத் தவறிவிட்டார். என்ன புரியவில்லையா? மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய வன சேவை அதிகாரியான பர்வீன் கஸ்வானின் ட்வீட்தான் இதற்குக் காரணம். தேக்கு மரக் கடத்தல் பற்றி ட்விட்டர் பயனர்களுக்குத் புகைப்படத்துடன் அவர் தெரிவிக்க அது விரைவில் வைரலானது. ஸ்லீப்பர் பேருந்தில் தேக்கு மரங்கள் கடத்தப்படுவதாகவும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் வாகனத்தை மறித்து கடத்தல் பொருட்களை மீட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். எனினும், சம்பவம் நடந்த இடத்தை கஸ்வான் வெளியிடவில்லை.
“வோல்வோ ஸ்லீப்பர் பஸ்ஸை தேக்கு மரக் கடத்தலுக்குப் பயன்படுத்துவதை கற்பனை செய்து பாருங்கள். இந்த புஷ்பா எங்கள் அணிகளை குறைத்து மதிப்பிட்டு இருந்தார். நல்லது இப்போது எங்களிடம் டீலக்ஸ் பேருந்து உள்ளது” என்று கஸ்வான் ட்வீட் செய்ததோடு, பேருந்து மற்றும் பொருட்கள் கடத்தப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
கஸ்வானின் ட்வீட் வேடிக்கையான எதிர்வினைகளையும் வன அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும் தூண்டியது. ஒரு ட்விட்டர் நபர் கருத்துத் தெரிவிக்கையில், “புஷ்பாவைக் குறிப்பிடுவது இங்கே மிகவும் பொருத்தமானது. எப்போதும் போல் சூப்பரான வேலை. ” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் கூறுகையில், "புஷ்பா கூட அவரது ஆரம்ப வாழ்க்கையில் பிடிபட்டார்." என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.