இன்று கோடை விடுமுறை வந்தாலும் மாணவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கி செல்போனில் கேம் விளையாடுவதையே பிரதானமாக வைத்துள்ளனர். ஆனால், சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறை என்றாலே சிறுவர்கள் மைதானங்களில் விளையாடுவது, கிணற்றில் நீச்சல் அடித்து குளிப்பது, மீன்பிடிப்பது என்று பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவார்கள்.


மீன்பிடிக்கும் சிறுவன்:


குறிப்பாக இன்று பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பது எல்லாம் பெரிதளவில் குறைந்துவிட்டது. இந்த நிலையில், இணையத்தில் சிறுவன் ஒருவன் தனது வித்தியாசமான வியூகத்தில் கிலோக்கணக்கில் எடை கொண்ட 2 மீன்களை அசாத்தியமாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


சுமார் 6 முதல் 8 வயது வரை மட்டுமே உடைய சிறுவன் ஒருவன் ஒரு பை, அதில் சுத்தியல், ஒரு நீண்ட தூண்டில் கம்பி (பட்டம் விடுவதற்கு சுற்றும் உருளையில் சுற்றுவது போன்று) ஆகியவற்றுடன் கண்மாய் கரை ஒன்றிற்று வருகிறான். பின்னர், அந்த நீண்ட தூண்டில் கம்பியில் மீன்கள் உணவு ஒன்றை மாவு போல பிசைந்து தூண்டில் முள்ளில் மாட்டுகிறான். பின்னர், கண்மாயின் நடுப்புறத்தில் வீசிவிட்டு பொறுமையாக அமர்கிறான்.






அப்போது, திடீரென அந்த தூண்டில் முள்ளில் மீன்கள் சிக்கியதால் தூண்டில் கம்பி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட சிறுவன் தூண்டில் கம்பியை இழுத்தான். அதற்கு ஏற்றாற்போல சைக்கிள் பெடல் போன்ற ஒன்றையும் அதில் இணைத்திருந்தான். உடனே அதை சுழற்றி அந்த மீன்களை கரைக்கு இழுத்தான். அந்த தூண்டிலில் 2 மீன்கள் சிக்கியிருந்தது. 2 மீன்களும் தலா 4 கிலோவிற்கு மேலே இருக்கும்.


குவியும் பாராட்டுகள்:


பின்னர், அந்த பெரிய மீன்களை தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பெரிய பையில் வைத்து கொண்டு சென்றான். சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பெவிகால் விளம்பரம் ஒன்றில் சிறுவன் ஒருவன் தூண்டிலில் பெவிகாலை தடவி மீனை எவ்வளவு எளிதாக பிடித்துச் செல்வான். இந்த சிறுவன் அந்த மீனை பிடித்துச் சென்றது அதுபோலவே இருந்தது.


தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 1.5 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு மேலே “உறுதி + புத்திக்கூர்மை + பொறுமை = வெற்றி” என்று பதிவிட்டுள்ளனர்.


பலரும் இந்த வீடியோவை பகிர்ந்ததுடன் அந்த சிறுவனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க: Chandrababunaidu: புகழ்ந்து பேசிய ரஜினி: எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சி - கொதித்தெழுந்த சந்திரபாபு - ஆந்திர அரசியலில் பரபரப்பு


மேலும் படிக்க: The Kerala Story : நாட்டை பிளவுபடுத்துகிறது… 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கடுமையாக சாடிய கேரள முதல்வர்