டெக்னோ பார்க்கின் முதல், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த புதிய  IT  இடங்கள் மூலம் குறைந்தது 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

கடந்த ஆறு ஆண்டுகளில், கேரளாவில் மொத்தம் 46.47 லட்சம் சதுர அடி  IT  இடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், டெக்னோபார்க்கில் 20.97 லட்சம் சதுர அடி, இன்போபார்க்கில் (Infopark) 22.62 லட்சம் சதுர அடி, மற்றும் சைபர்பார்க்கில் (Cyberpark) 2.88 லட்சம் சதுர அடி ஆகியவை அடங்கும். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 45,869 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், டெக்னோபார்க்கில் 15,000 வேலைகள், இன்போபார்க்கில் 29,700 வேலைகள் மற்றும் சைபர்பார்க்கில் 1,169 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

டெக்னோபார்க்கின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் நாயர் கூறுகையில், "இந்த மூன்று கட்டங்களில் உருவாகும் புதிய  IT  இடங்கள் திருவனந்தபுரத்தின்  IT சூழலுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். தற்போது, கிடைக்கக்கூடிய நிலங்களை திறம்பட பயன்படுத்துவதிலும், முதல், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில் நடந்து வரும் உள்கட்டமைப்பு திட்டங்களை முடிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இவை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தவுடன், சாத்தியக்கூறு ஆய்வுகள், தேவை மதிப்பீடு மற்றும் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி, எந்தவிதமான தடையும் இல்லாத நிலங்கள் கிடைப்பதை பொறுத்து கூடுதல் விரிவாக்கம் பரிசீலிக்கப்படும்" என்று  கூறியுள்ளார்.

முதல் கட்டத்தில், பிரிகேட் குழுமத்தின் முதல்  IT  கட்டிடம், பிரிகேட் ஸ்கொயர்  கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இது இன்னும் சில மாதங்களில் செயல்பட உள்ளது. பிரிகேட் நிறுவனத்தின் உலக வர்த்தக மையம் சுமார் 1.5 மில்லியன் சதுர அடி பரப்பளவுடன், விரைவில் கட்டும் பணி தொடங்க உள்ளது. மேலும், முதல் கட்டத்தில் கல்லாயி என்ற புதிய  IT  கட்டிடம், 50,000 சதுர அடி பரப்பளவுடன் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 2025க்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும். 

இது உலகளாவிய திறன் மையங்களுக்கான ஒரு மையமாக செயல்படும். டெக்னோபார்க் மூன்றாம் கட்டத்தில், Taurus Investment Holdings India அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  Taurus Downtown Trivandrum Project இரண்டாம் கட்டத்தை தொடங்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில், 1.5 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட Niagara Building கட்டி முடிக்கப்பட்டு, தற்போது Fortune 500 நிறுவனங்கள், GCCகள் மற்றும் பிற நிறுவனங்களால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் கட்டத்தில் Global Public School தனது புதிய வளாகத்தில் ஜூன் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இது இந்த சூழலை மேலும் வலுப்படுத்துகிறது.

டெக்னோபார்க் நான்காம் கட்டத்தில், டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் புதிய வளாகம், 1.2 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட முதல்  IT  கட்டிடம், ஜனவரி 2026க்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காம் கட்டத்தில் Quad project முதல்  IT கட்டிடத்தின் கட்டுமானப் பணியும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில் நிலம் குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக சில ஆர்வக் கோரிக்கைகள் (EoIs - Expressions of Interest) வந்துள்ளன, அவை தற்போது விவாதத்தில் உள்ளன என்று டெக்னோபார்க்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.