- சென்னை சீனிவாசபுரம் அருகே, அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் அது வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.40 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனை. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.
- போதை பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் வரும் 28, 29 தேதிகளில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக என விசாரிக்க முடிவு.
- ஆந்திராவில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்னூல் மாவட்ட ஆட்சியர் தகவல்.
- பீகாரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி. சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சியான ஆர்ஜேடி-க்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் விஐபி கட்சிகளின் 4 வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.
- எந்த தவறு செய்ய நினைத்தாலும் பாகிஸ்தான் 100 முறை யோசிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரின் போது அந்நாட்டிற்கு அதிக டோஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சு.
- அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிவரும் டோமாஹாக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கப்பட்டால் பலமான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மேற்குக்கரை பகுதியை இஸ்ரேல் சட்டப்பூர்வமாக இணைத்துக் கொண்டால், அமெரிக்காவின் மொத்த ஆதரவையும் இஸ்ரேல் இழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை தொடுக்கலாம் என்ற அச்சத்தில், 5,000-த்திற்கும் மேற்பட்ட ரஷ்ய தயாரிப்பு இக்லா-எஸ் விமான எதிர்ப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்துள்ளது வெனிசுலா.
- நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக, மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தில் ஏஐ பிரிவு CEO வாங் தகவல்.
- சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மெக் லேனிங்கை சமன் செய்தார்.