ஒடிசாவில் பாலிவுட் திரைப்படமான 'தூம்' பாணியில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட திருடர்கள் வெள்ளிக்கிழமை இரவு, நபரங்பூர் மாவட்டத்தின் உயர்நிலைப் பள்ளியில் கணினிகள் மற்றும் பிற மின்னணுப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
நபரங்பூர் காதிகுடா பகுதியில் உள்ள இந்திராவதி திட்ட மேல்நிலைப் பள்ளியை சனிக்கிழமை காலை திறந்தபோது, பள்ளி தலைமையாசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கணினிகள், பிரிண்டர், பிரிண்டர் இயந்திரம், எடை இயந்திரம் மற்றும் ஒலிப்பெட்டி திருடுபோனது தெரிய வந்துள்ளது.
பள்ளியின் பிளாக் போர்டில் 'தூம் 4', 'நாங்கள் திரும்புவோம் விரைவில் வருவோம்' என்று எழுதப்பட்டிருந்தது பள்ளி அதிகாரிகளை உலுக்கியது. "முடிந்தால் எங்களைப் பிடிக்கவும்" என திருடர்கள் பிளாக் போர்டில் ஒடியா மொழியில் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: போன் செய்த மோடி...கட்சியிலிருந்து விலகிய 8 மாதங்களில்...பாஜகவில் இணையும் அமரீந்தர் சிங்?
திருட்டைப் பற்றி முதலில் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சர்பேஸ்வர் பெஹெரா, இது குறித்து காதிகுடா காவல் நிலையத்தில் புகார் செய்ததாகக் கூறியுள்ளார். இதற்கு முன், நந்தஹண்டி தொகுதிக்கு உட்பட்ட தஹானா பள்ளியிலும், தென்துளிக்குண்டி தொகுதி கல்வி அலுவலகத்திலும் இதே பாணியில் கணினிகள் மற்றும் மின்னணு பொருட்கள் திருடு போகின.
திருடர்கள் கொள்ளைடிப்பதும் காவல்துறை அதிகாரிகள் அதை கண்டுபிடிப்பதுமே தூம் வரிசை படங்களின் கடையாகும். தூம்-3 திரைப்படம், 2013 இல் வெளியானது.
கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தூம் 2 படத்தை சஞ்சய் காத்வி என்பவர் இயக்கினார். ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் சோப்ரா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர். இந்தப்படத்தை சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்பில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அபிசேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இருவரும் காவல்துறை உயர் அதிகாரிகளாக நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்