மும்பையில் உள்ள தானே நகரை சேர்ந்த 39 வயது நபர் கார்பரேட் நிறுவன ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மார்ச் 17-ஆம் தேதி வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பெண் தோன்ற்றியுள்ளார்.


நிர்வாண வீடியோ கால்:


அந்த பெண் கார்பரேட் நிறுவன ஆலோசகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்பெண் திடீரென தனது ஆடையை கழற்றி விட்டு ஆபாசமாக காட்சியளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்பரேட் நிறுவன ஆலோசகர் வீடியோ கால் இணைப்பை துண்டித்து விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு  மீண்டு அந்த பெண்ணிடம் இருந்து அவருக்கு வீடியோ வந்துள்ளது. மேலும் ஆபாச பெண்ணுடன் அவர் பேசுவது போல சில ஸ்கிரீன் ஷாட்டுகளும் அவருக்கு அனுப்பப்பட்டு இருந்தன. அந்த நபர் உடனடியாக அவற்றை நீக்கினார்.


இந்த நிலையில் வீடியோ கால் வந்ததற்கு அடுத்த நாள் அவரை ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தன்னை டெல்லி காவல் ஆணையர் என அறிமுகப்படுத்தி கொண்டார். சம்பந்தப்பட்ட பெண் விபச்சார தொழில் செய்து வருவதால், நாங்கள் அவரை தேடிவருவதாகவும், இது தொடர்பாக விசாரித்த போது, உங்களது வீடியோ சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருப்பதாகவும், இதை தடுத்து நிறுத்த வேண்டுமானால் தான் கூறும் நபரிடம் பேசும்படியும் அவர் தெரிவித்துள்ளார். 


ரூபாய் 6.50 லட்சம் இழப்பு


அந்த நபர் கூறிய படி கார்பரேட் நிறுவன ஆலோசகர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யவிடாமல் பார்த்து கொள்வதாக கூறியுள்ளார். தன்னை பற்றி சமூக வலைதளத்தில் ஆபாச அவதூறு பரவி விடுமோ என்ற அச்சத்தில் கார்பரேட் நிறுவன ஆலோசகர் சம்பந்தப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். பின்னர் இந்த வீடியோ தொடர்பாக அவரிடம் பேசிய ஒரு கும்பல் மீண்டும் மீண்டும் அவரிடம் பணம் பறித்து வந்துள்ளது.


இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் விழித்துக்கொண்ட கார்பரேட் நிறுவன ஆலோசகர் இந்த மோசடி குறித்து  காசர்வடவலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் 15 மர்ம நபர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.


மேலும் படிக்க 


Cylinder Price: ஹாப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடி குறைவு..! காரணம் என்ன தெரியுமா..?