அரசு கொடுக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முன் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாபில் 7 மசோதா தாக்கல்களை ஆளுநர் முடக்கி வைத்தது தொடர்பாக அம்மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மசோதாக்களை நிறுத்தி செய்து வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என நீங்கள் எவ்வாறு கூற இயலும்? மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏன் நீதிமன்றம் வர வேண்டும்? ஏற்கனவே வேறு ஒரு மாநிலத்திலும் இது போன்று கோரிக்கை எழுந்தது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


பின், தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். கேரளாவில் 3 மசோதாக்கள் மற்றும் தமிழ்நாட்டில் 12 - கிகும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மனுக்கள் வரும் 10  ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலாகி உள்ளது என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். 


அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆளுநர் முடிவெடுக்கு வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் மாநில அரசின் மனு மீதான விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.