புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி...!

’’இதயத்தில் ஸ்டென்ட் வைத்த காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் சென்று மேல் சிகிச்சை பெறுவதற்கு அவர் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகிறார்’’

Continues below advertisement

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, கடந்த வியாழக்கிழமை முதல் சட்டசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அதன்பின் அன்று மாலை 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகளில் நடைபெற்று வருகிறது.

 

Madurai bridge collapse | மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 4ஆம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், பேரவைக்குள் வராமல் கார் வெளியேறியது. அதனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் தொடங்கியது. பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் விசாரித்த போது, சபாநாயகர் செல்வம் சட்ட பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அதைத் தொடர்ந்து அவரை டாக்டர்கள் பரிசோதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல் நிலையைப் பொறுத்தும் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்றனர்.

சபாநாயகர் செல்வம் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள சூழலில் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. சபைக் காவலர்களே மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் தரப்பில் விசாரித்தபோது நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை சபாநாயகருக்குத் தரப்படுகிறது என்று குறிப்பிட்டனர். இருப்பினும் இதயத்தில் ஸ்டென்ட் வைத்த காரணத்தால் சபாநாயகர் செல்வம் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சென்று மேல் சிகிச்சை பெறுவதற்கு அழைத்து செல்லப்படுகிறார். 

 

Villupuram Mother beat child : கள்ளக்காதலால் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்.. தாயின் பரபரப்பு வாக்குமூலம்!

Continues below advertisement