பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையின் சோதனை நடவடிக்கை 59 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று முடிவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் தரவுகளை சேகரித்து வைத்துக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறியதை பிபிசியின் பத்திரிகை குழு உறுதிப்படுத்தியது மேலும் இந்த சோதனையில் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது என்றும் "எங்கள் அலுவகத்தின் நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது, அச்சமின்றி இனியும் செயல்படுவோம்" என பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி அலுவலகத்தில் செவ்வாயன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபட்டனர். மூன்று நாள் தொடர்ந்து நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்தது.
பிபிசி ஆவணப்படம்:
பிபிசி ஒரு அறிக்கையில், சோதனையின் போது அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும், இந்த சூழல் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்த ஆவணப்படம் இங்கிலாந்தில் மட்டுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்றாலும், இந்திய அரசாங்கம் மக்கள் இந்த ஆவணப்படத்தை பகிர்வதற்கு கண்டனம் தெரிவித்து, இது இந்தியாவிற்கு எதிரானது, குரோத பிரச்சாரம் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்று காலனித்துவத்துடன் கூறியுள்ளது என பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் டெல்லியில் ஆவணப்படத்தை பார்க்க கூடியிருந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சோதனைக்கு எதிரான கண்டனங்கள்:
2002ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதலமைச்சர் பிரதமர் மோடியின் பங்கில் கவனம் செலுத்தி இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா இந்த சோதனை மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும் "அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் ஸ்தாபனத்தை விமர்சிக்கும் பத்திரிகை நிறுவனங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தும் ஒரு தொடர்ச்சியான போக்காக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல், "ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மூடி மறைக்க பிபிசி நிறுவனத்தை சோதனை மூலம் மிரட்ட முயற்சிப்பதாகவும், வருமான வரித் துறையின் பரந்த அதிகாரங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதிப்படுத்த மீண்டும் மீண்டும் ஆயுதமாக்கப்படுகின்றன” கூறியுள்ளது.