குடியசுத் தலைவர் நீதிபதி நூத்தலபதி வெங்கட ரமணாவை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். தற்போதுள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே ஓய்வு பெறுவதை அடுத்து இவர் வரும் ஏப்ரல் 24, 2021 அன்று பதவியேற்பார். இவர் 25 ஆகஸ்டு 2022-இல் பணி ஓய்வு பெறுகிறார். 


நூத்தலபதி வெங்கட ரமணா இந்திய உச்ச நீதிமன்றத்தின் 48வது இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 24 ஏப்ரல் 2021 முதல் துவங்குகிறது. முன்னர் என். வி. ரமணா 17 பிப்ரவரி 2014 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராகவும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியவர்.  


47- வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த பாப்டே, வழக்கமான மரபின்படி தமக்கு அடுத்த வரக்கூடிய தலைமை நீதிபதியை தேர்வு செய்து மத்திய அரசுக்கு முன்னாதாக பரிந்துரை  செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.