டேராடூன்: முழு நகரமும் மூழ்கக்கூடும் என்று national remote sensing centre (NRSC) - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. மேலும் ஜோஷிமத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்களையும், நிலம் சரிவு குறித்த முதற்கட்ட அறிக்கையையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.






ஹைதராபாத்தை சேர்ந்த NRSC நிறுவனம் மூழ்கும் பகுதிகளின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.


புகைப்படங்களில் இராணுவத்தின் ஹெலிபேட், நரசிம்மர் கோவில்  உட்பட முழு நகரமும் மூழ்கும் என்று கணித்து பதட்டமான இடங்களாக குறிக்கப்பட்டுள்ளது.






இஸ்ரோவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், உத்தரகாண்ட் அரசு, அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது, அங்குள்ள மக்கள் முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.


அறிக்கையின்படி, ஏப்ரல் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் நிலம் சரிவு மெதுவாக ஏற்பட்டுள்ளது, அதாவது இந்த காலக்கட்டத்தில் ஜோஷிமத்தில் 8.9 செ.மீ. வரை நிலம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 27, 2022 மற்றும் ஜனவரி 8, 2023 க்கு இடையில், நிலம் சரிவின்  தீவிரம் அதிகரித்து, இந்த 12 நாட்களில் நகரம் 5.4 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது.


ஜோஷிமத்-அவுலி சாலையும் நிலம் சரிவதால் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.


ஜோஷிமத்தில் வீடுகளில் ஏற்பட்ட விரிசல்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு  வரும் நிலையில் இஸ்ரோவின் இந்த புகைப்படங்கள் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.