கேரளா மாநிலத்தில் தொலைக்காட்சி நேரலையில் கேரள விவசாய பல்கலைக்கழக திட்ட இயக்குனர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது திடீரென ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பது தான். இது வயது வரம்பின்றி இளைஞர்கள் முதல் பெரியவர்களை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. குறிப்பாக பலருக்கு உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது இது போன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது.


அந்த வகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், மத்திய அரசின் பிரச்சார பாரதி நிறுவனம் மூலமாக பிராந்திய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் (தூர்தர்ஷன்) நடத்தப்படுகிறது. அந்த வகையில், கேரளாவில் மலையாள மொழியில் அந்த தொலைக்காட்சியில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில், கேரளா விவசாய பல்கலைக்கழக திட்ட இயக்குனர் அனி எஸ். தாஸ் (வயது 59) சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது விவசாயம் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.


அப்போது திடீரென நேரலையில் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனடியாக ஆசுவாப்படுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு இருக்கும் ஊழியர்கள் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நேரலையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.