வெங்காயம் தான் வெட்டினால் கண்ணீரை வர வைக்கும் ஆனால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, நுகர்வோரின் கண்களில் கண்ணீரை வரவைத்துள்ளது. தக்காளியின் விலை உயர்வு பலரது பாக்கெட்டுகளையும், வாழ்கையையும் பாதித்துள்ளது. அதிக விலைகள் நுகர்வோரை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளை பெரிதும் நம்பியிருக்கும் பிற வணிகங்களுக்கும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மத்தியில், ஒரு விநோதமான சம்பவமும் நடந்தது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோலில் ஒரு பெண் தனது கணவர் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.






தக்காளிக்காக வீட்டை விட்டுச்சென்ற பெண்


உணவகம் வைத்திருக்கும் சந்தீப் பர்மன், தனது மனைவி ஆர்த்தி பர்மனைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையை அணுகியுள்ளார். "என் மனைவி, என் மகளை அழைத்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஒரு பேருந்தில் ஏறினார். நான் அவர்களை மூன்று நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், அவரது புகைப்படத்தையும் காவல்துறையிடம் கொடுத்துள்ளேன்," என்று பர்மன் கூறினார். தன்னிடம் கலந்தாலோசிக்காமல் உணவில் தக்காளி சேர்த்தால் மனைவி வருத்தமடைந்ததாகவும், அது குறித்து வாக்குவாதம் செய்ததாகவும் அந்த நபர் கூறினார். "நான் தக்காளி சேர்ப்பதை அவர் விரும்பவில்லை." என்றார். அந்த நபர் புகார் அளித்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Vikraman: ‘பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.. நியாயம் கேட்ட என்னை மிரட்டினார்’ - பிக்பாஸ் விக்ரமன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு


இனி மனைவி பேச்சை கேட்டு நடப்பேன்


"ஆர்த்தி தனது கணவருடன் வாக்குவாதத்திற்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியேறி உமாரியாவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றார்" என்று ஷாஹ்டோலின் தன்புரியின் நிலைய அலுவலக அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார்.


ஆனால் போலீசார் தலையிட்டு கணவன்-மனைவி இருவரையும் பேச வைத்துள்ளனர். அவர் விரைவில் வீடு திரும்புவார், என்று காவல் துறை அதிகாரி ஜெய்ஸ்வால் மேலும் கூறினார். காவல்துறையின் தலையீட்டிற்குப் பிறகு தற்போது அவர் திரும்பி வந்துள்ளார். மனைவியுடன் மீண்டும் இணைந்த பிறகு பேசிய அந்த நபர், "இது என் தவறு, நான் இனி என் மனைவி சொல்வதைக் கேட்டு நடப்பேன்" என்று கூறினார். 






தக்காளிக்கு ஏன் இந்த விலை?


நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நடவு மற்றும் அறுவடை பருவங்களின் சுழற்சி மற்றும் பிராந்தியங்களில் உள்ள மாறுபாடு ஆகியவை தக்காளியின் பருவகால விலைக்கு முதன்மையாக காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.நாட்டின் சில பகுதிகளில் சமையல் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.200க்கு மேல் உயர்ந்து வருவதால், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை முதல் தேசிய தலைநகர் மற்றும் சில நகரங்களில் உள்ள சில்லறை சந்தைகளில் தக்காளியை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.