உடலுறவு மனநலன் மற்றும் உடல்நலனுக்குப் பல வகையில் உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு உடலுறவில் எரியூட்டப்படும் கலோரிக்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவும். உடலுறவு சமயத்தில் சுரக்கும் டோபமைன், செரட்டோனின் போன்ற ஹார்மோன்கள் மன அழுத்தத்தைப் போக்கி நம்மை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். ஆனால் உங்கள் பார்ட்னருடனான உடலுறவை விட சுய இன்பம் பல வகையில் சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். 


காரணம் இதுதான்...


பார்ட்னருடன் உடலுறவு சமயத்தில் உச்சமடைய முடியவில்லை என்றால் அது பல சிந்தனைகளை உங்களுக்கு எழுப்பும். ஒருவேளை நமக்கு செக்ஸில் நாட்டம் குறைந்துவிட்டதோ, அல்லது செக்ஸுக்கான ஹார்மோன் சுரப்பதில் கோளாறோ, நாம் உச்சமடையவில்லையே அது பார்ட்னருக்கு திருப்தி அளித்திருக்குமா? என பல கேள்விகள் நமக்கு எழும். செக்ஸில்  ஏன் இத்தனை குழப்பம் இருக்க வேண்டும். இதுவே சுய இன்பம் செய்துகொள்ளும்போது இதுபோன்ற எவ்வித சிந்தனைகளும் எழாது. மாறாக நம் உடலை நாம் எக்ஸ்ப்ளோர் செய்யும் சுதந்திரம் அந்த இடத்தில் நமக்குக் கிடைக்கிறது. உங்களுக்கு இன்பம் ஊட்டும் பகுதி எது என நம்மாலேயே அறிய முடிகிறது.


மேலும் பார்ட்னர் இல்லாத சூழலில் உடலுறவின் மொத்த மகிழ்ச்சியையும் உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளும் வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது.


சுய இன்பம் உடலுக்கு நல்லது. தொடர்ச்சியாக சுய இன்பம் செய்வது பிறப்புறுப்புப் பகுதியில் புற்றுநோய் உண்டாவதையும் பெண்களில் பிறப்புறுப்புத் தொற்று ஏற்படுவதையும் தடுக்கிறது.


மேலும் சுய இன்பம் மன அழுத்தத்தைப் போக்கிறது.அதனால் உடல் ரிலாக்ஸாவதுடன் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது.


உடலுறவைப் போலவே சுய இன்பத்திலும் உங்கள் உடலை பலவகையில் எக்ஸ்ப்ளோர் செய்ய முடியும். உதாரணத்துக்கு, சுய இன்பத்துக்கான செக்ஸ் டாய்ஸ்களில் பல வகைகள் உண்டு, அவை ஒவ்வொன்றும் உடலில் ஒவ்வொரு வகை உணர்ச்சியை உந்தும். இவற்றை எக்ஸ்ப்ளோர் செய்யும் வாய்ப்பு பார்ட்னருடனான செக்ஸில் கிடைப்பது என்பது மிக மிகக் குறைவு. 


மேலும் உங்கள் பார்ட்னரை இதற்கு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பார்ட்னரிடம் உடலுறவுக்கு ஓகேவே எனக் கேட்டு அவர் நோ சொன்னதும் மூட் ஆஃப் ஆகும் சூழல் சுய இன்பத்தில் ஏற்படாது.