புத்தாண்டு நேற்று தொடங்கிய நிலையில், ஜி.எஸ்.டி வரி, கேஸ் சிலிண்டர், வங்கி லாக்கர் உள்ளிட்ட பல விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது? இதனால் பொதுமக்களுக்கு ஏறபடும் சாதகம்..? மற்றும் பாதகங்கள்..? குறித்து தெரிந்து கொள்வோம். 


சிலிண்டர் விலை:


19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையானது, 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையானது, 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில், 19 கிலோ எடையுள்ள் சிலிண்டரானது ரூ.1,917-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மற்றமும் இல்லை. 


வாகனங்கள் விலை:


கார் உள்ளிட்ட வாகனங்களின் விலையானது, ஜனவரி 1ம் தேதி முதல் அதிகரித்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், மாருதி சுசுகி, ரெனால்ட், கியா மோட்டார்ஸ், எம்.ஜி. மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும், தங்களின் கார்களின் விலையை ஏற்றம் செய்துள்ளன. 


கைப்பேசிகள் விதிகள்:


அனைத்து கைப்பேசி உற்பத்தியாளர்களும், ஜனவரி 1 ஆம் தேதி மூலம், IMEI எண்ணை பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முறைகேடுகளை தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 


ஜிஎஸ்டி இன்வாய்ஸ்


ஜிஎஸ்டி இன்வாய்சிங்கிற்கான உச்ச வரம்பானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் குறைக்கப்படுள்ளது. உச்ச வரம்பானது ரூ. 20 கோடியிலிருந்து 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 


 ஹச்.டி.எப்.சி கிரிடெட் கார்டில், ஜனவரி 1ஆம் தேதி முதல் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பில் தொகையை செலுத்தும் போது, வழங்கப்படும் ரிவார்டு பாயிண்டுகள் மாறியுள்ளது.


Gautham Adani: ’என் வளர்ச்சியை பிரதமர் மோடியுடன் இணைத்துச்சொல்ல முடியாது..’ குற்றச்சாட்டுகளை மறுத்த கௌதம் அதானி….