Gyanvapi Masjid: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி..

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement

ஞானவாபி மசூதி வழக்கில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது. இதையடுத்து, மசூதியின் வளாகத்தில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அவசர அவசரமாக அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி உச்சநீதிமன்றத்தை நாடியது. விசாரணையின் முடிவில், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ஜுலை 26ம் தேதி தடை விதித்த நீதிமன்றம், மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தினர். தொடர்ந்து, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்விற்கான தடையை ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பு இன்று அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அதுவரையில் தொல்லியல் துறை மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தக் கூடாது எனவும், அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாளில் நீதிமன்றம் மீண்டும் கூடிய போது, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்யலாம் என்ற வாரணாசி மாவட்ட நீதிமன்றம் கடந்த 21ம் தேதி அளித்த தீர்ப்புக்கு எதிராக, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த வழக்கிற்கான தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் இன்று இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். 

Web Movie Review: சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை சுவாரஸ்யம் கூட்டியதா... நட்டியின் ‘வெப்’ திரைப்படம் எப்படி இருக்கு?

Asian Champions Trophy Hockey: முதல் நாளே 3 போட்டி .. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடக்கம்..

 

Continues below advertisement