”தடுப்பூசிபோட்ட பிறகு அவரது முழங்கால் பிரச்சனைகள் குறைந்துள்ளன ”என்றார்.  அதனால்தான் அவர் பல தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார்.


கிராமப்புற மருத்துவராகவும் நீண்ட காலம் பணியாற்றிய இவர், ஞாயிற்றுக்கிழமை அன்று12 வது தடுப்பூசியை போட சென்றுள்ளார். பல தொலைபேசி எண்களை மாற்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, புரைனியின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.  இதில் சிவில் சர்ஜன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.  பிரம்மா தேவ் மண்டல், இந்திய தபால் சேவையின் முன்னாள் ஊழியர்.  சிவில் சர்ஜன் டாக்டர் அமரேந்திர நாராயண் ஷாஹியின் தெரிவித்ததாவது, ஐடியை மாற்றுவதன் மூலம் தடுப்பூசியை பல முறை எடுத்துக்கொள்வது சட்டத்திற்கு எதிரானது.  அவர் மீது குற்றம் சாட்டப்படும்.


பிப்ரவரி 13 ஆம் தேதி, முதல் முறையாக தடுப்பூசியைப் பெற்றார் பிரம்ம தேவ்.  மார்ச் 13 அன்று இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே 19 அன்று, மூன்றாவது டோஸ் அவுரை துணை சுகாதார மையத்தில் வழங்கப்பட்டது.  ஜூன் 16 அன்று, கோட்டாவில் உள்ள பூபேந்திர பகத்தின் முகாமில் அவருக்கு 4 வது டோஸ் வழங்கப்பட்டது.  ஜூலை 24 அன்று பழைய பாடி ஹாட் பள்ளியில் நடந்த முகாமில் 5 டோஸ் வழங்கப்பட்டது.


ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 31 அன்று, 6 வது டோஸ் நாத்பாபா ஸ்தான் முகாமில் வழங்கப்பட்டது.  செப்டம்பர் 11 அன்று, 7 வது டோஸ் பாடி ஹாட் பள்ளியில் வழங்கப்பட்டது.  செப்டம்பர் 22 அன்று, அவர் பாடி ஹாட் பள்ளிக்குச் சென்று 8 முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டது.  இரண்டு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 24 அன்று, கலாசன் சுகாதார துணை மையம் அவருக்கு 9 வது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டது.  ககாரியா மாவட்டத்தில் உள்ள பர்பட்டாவில் அவர் 10-வது முறையாக தடுப்பூசியைப் பெற்றார்.  11வது முறையாக, அவர் பாகல்பூரின் கஹல்கானில் கோவிட்-19 தடுப்பூசி பெற்றார்.  என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்வதற்குள், அவர் 12-வது முறையாக மருந்து எடுக்கத் தயாராகிவிட்டார்.


கொரோனா தடுப்பூசி என்பது இந்த நெருக்கடியான காலத்தின் மிக அவசியமான தேவை. மருத்துவ அறிவியல் மூலம்தான் நாம் பல நோய்களை வென்று வந்திருக்கிறோம். கொரோனா தடுப்பூசி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகே உறுதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளை பின்பற்றியே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறபோது பிரம்மா ததேவ் அசால்டாக 11 தடுப்பூசிகளை செலுத்தி 12 வது தடுப்பூசிக்கு தயாராகியுள்ளார்.