சென்னைக்கு வந்ததை மறக்க முடியாத பயணமாக மாற்றியதற்காக நன்றி என்று கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி


 






இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “ சென்னையின் நினைவுகள்... இந்தப்பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றியதற்காக நன்றி” என்று பதிவிட்டு, சென்னை தொடர்பான நினைவலைகளை வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். 


தமிழகத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28ஆம் தேதி) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 29ஆம் தேதி) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 69 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.


தொடர்ந்து பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் வணக்கம் சொல்லித் தொடங்கிய பிரதமர் மோடி, விவேகானந்தர், கலாமை மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கினார். உலகமே இந்திய இளைஞர்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 


அனைத்து மாணவர்களின் கனவுகளும் நனவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் இன்று முக்கியமான நாள். நாட்டைக் கட்டி அமைக்கக்கூடிய ஆசிரியர்களாகிய நீங்கள்தான், நாளைய தலைவர்களை உருவாக்குகிறீர்கள். 


உலகமே இந்திய இளைஞர்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இளைஞர்களே இந்திய வளர்ச்சியின் இயந்திரம். கடந்த ஆண்டு அந்நியச் செலாவணியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இளைஞர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக துடிப்புமிக்க சென்னை நகரத்தில் கூடி இருக்கிறோம். மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை சுதந்திரம் அளித்துள்ளது.'' என்றார்