விங் கமாண்டர் எம் ராணா மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட் அத்விதியா பால் ஆகிய இரு விமானிகள் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நேற்று மாலை மிக்-21 போர் விமான விபத்தில் உயிரிழந்தனர்.


 






 


இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் போர் விமானம், கடந்த ஜூலை 28 இரவு ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாகஅந்த மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் தகவலை உறுதி செய்தார்.


மிக்-21 போர் விமானத்தை ஓட்டிச் சென்ற இரண்டு விமானிகள் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக சற்று முன் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. IAF தகவலின் படி, ஜூலை 28 (வியாழன்) அன்று இரவு 9:10 மணியளவில் இரட்டை இருக்கைகள் கொண்ட MiG-21 பயிற்சி விமானம் ராஜஸ்தானில் உள்ள உட்லாய் விமான தளத்தில் இருந்து மாலையில் புறப்பட்டுள்ளது. 


பறந்து கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இது தொடர்பாக IAF  வெளியிட்டுள்ள அறிக்கையில் "இரவு 9:10 மணியளவில், பார்மர் அருகே விமானம் விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் படுகாயமடைந்தனர். உயிர் இழப்புகளுக்கு IAF ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, உயிரிழந்த குடும்பங்களுடன் உறுதியாக நிற்கிறது" என்று IAF அறிக்கையில் தெரிவித்துள்ளது.


"பேட்டூவில் உள்ள பிம்டா கிராமத்திற்கு அருகே IAF விமானம் விபத்துக்குள்ளானது" என்று பார்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பாண்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமானப்படை தளபதி வி ஆர் சவுதாரியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். "ராஜஸ்தானில் பார்மர் அருகே IAF-ன் Mig-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு ஏர் வாரியர்களை இழந்ததால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன்" என்று ராஜ்நாத்சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.






விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இளம் வீரர்களின் இந்த இழப்பு, நாட்டிற்கு பேரிழப்பு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.