நுபுர் சர்மாவை கொலை செய்ய பயங்கரவாதி திட்டம்...வெளியான பரபரப்பு தகவல்
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Just In




பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் அந்த பயங்கரவாதி இருந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நபிகள் நாயகத்தைப் பற்றிய அவரது கருத்துக்கள் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி வளைகுடா நாடுகள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, நூபுர் ஷர்மா பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இடைநீக்கம் செய்யப்பட்டார். பயங்கரவாதி, சஹரன்பூரில் உள்ள கங்கோஹ் கிராமத்தைச் சேர்ந்த முகமது நதீம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முகமது நதீம் ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருந்தது அவரது தொலைபேசி பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் மூலம் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான பயற்சியை போன் மூலம் அவர் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முகமது நபி குறித்து சர்ச்சைக் கருத்தினை தெரிவித்த நுபுர் சர்மா, பாஜகவிலிருந்து நீக்கப்பட்டப் பின் சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்றிருந்தார். தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சியினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்தி வந்தனர். மேலும் இது கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அவர் கருத்து உள்ளாதாக நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக உருவானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்