தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் பேருந்துகளில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 


நவம்பர் 30 அன்று மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பெத்தகோதப்பள்ளி கிராமத்தில் அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. அதேபோல,  டிசம்பர் 7 ஆம் தேதியன்று சித்திபேட் மாவட்டம் அருகே அரசுப் பேருந்தில் (TSRTC) பயணித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.






 


"இந்த இரண்டு பெண்களுக்கும் அந்தந்த இடங்களுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டது. மேலும் TSRTC குழு உறுப்பினர்கள் மற்றும் சக பயணிகள் அவர்களுக்கு குழந்தைகளைப் பெற உதவினார்கள். குழந்தை பிறந்ததும் தாயும் சேயும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  " என்று டிஎஸ்ஆர்டிசியின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜனார் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 


‛கோலி இன்னும் இந்திய அணியின் தலைமையே... அவர் அணியின் பலம்...’ - ரோஹித் அளித்த டச்சிங் பேட்டி


அரசு நடத்தும் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (Telangana State Road Transport Corporation) பேருந்துகளில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு "பிறந்தநாள் பரிசாக" வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிப்பதற்கான பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.


மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள், விமான நிலைய சிறப்புச் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கும் இந்த பாஸ் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண