கொரோனா ஊரடங்கை முழுவதுமாகத் தளர்த்தி தெலங்கானா மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் கே.சி.சந்திரசேகரராவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 





‘லாக்டவுனை முற்றிலுமாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்புகள் மற்றும் தினசரி பாதிப்பு சதவிகிதம் கணிசமாக குறைந்து மாநிலத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என மருத்துவ அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை ஆய்வு செய்து லாக்டவுனை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லாக்டவுனின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் நீக்க அமைச்சரவை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வருவதை அமைச்சரவை கவனித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மற்ற மாநிலங்களை விட வேகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்துவருகிறது என அமைச்சரவை உறுதி செய்துள்ளது. ஜூன் 19 ஆம் தேதி வரை அமலில் இருந்த லாக்டவுன் நாளை (ஜூன் 20) முதல் முழுமையாக நீக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஜூலை 1 முதல் கல்வி நிறுவனங்களை அனைத்து வகையிலும் முழு ஆயத்தத்துடன் தொடங்க  அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.



பொதுச்சொத்துக்கும் , சாமானிய மக்களின் உயிருக்கும் சேதம் விளைவிக்காமல் இருக்க முக்கிய நோக்கத்துடன் மாநில அமைச்சரவை எடுத்த முடிவில் பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது. கொரோனா பிரச்னைகளில் லாக்டவுன் அலட்சியமாக இருக்காது என அமைச்சரவை தெளிவுபடுத்தியது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பராமரிப்பது, சானிடைசர் மற்றும் பிற கொரோனா சுய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சுய கட்டுப்பாட்டுடன் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சரவை மக்களுக்குக் கோரிக்கை விடுக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ’நீட் பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு மெயில் அனுப்புகிறேன்’ - நடிகர் சூர்யா!